»   »  சவால்களைச் சந்தித்தால்தான் அடுத்த லெவலுக்குப் போக முடியும் - "டார்லிங்" பிரகாஷ்

சவால்களைச் சந்தித்தால்தான் அடுத்த லெவலுக்குப் போக முடியும் - "டார்லிங்" பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக மாறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சவால்கள் சுவாரசியமானவை, சவால்களைச் சந்தித்தால் தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

2006 ம் ஆண்டில் வெயில் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் இந்த 2016 ம் ஆண்டில் தனது 10 வருட திரை வாழ்க்கையை நிறைவு செய்ய இருக்கிறார்.

ஆமாம் வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் ஜி.வி.பிரகாஷின் 10 வருட திரை வாழ்க்கை முடிந்து, 11 வது ஆண்டு திரையுலக வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்.

After crossing the challenges in life can go to the next level- G.V.prakash

இந்தப் பத்து வருடங்களில் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது முழு நடிகராகவே மாறி விட்டார்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, பென்சில், கெட்ட பயடா இந்தக் கார்த்தி, பாட்ஷா என்கிற ஆண்டனி என்று கால் டஜன் படங்களைக் கையில் வைத்திருக்கிறார், ஒரே நேரத்தில் இவ்வளவையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் இன்னும் +1 ஐக் கூட முடிக்கவில்லை ஆனால் இசையில் சவுண்ட் இன்ஜினியரிங் முடித்து இசைத்துறைக்கு வந்தேன். அதே போல நடிகனாக ஆசைப்பட்டபோது எனது அப்பா கூட வேண்டாம் என்று தான் கூறினார், ஆனால் நான் நம்பிக்கையுடன் நடிக்க வந்தேன்.

இதுபோல சவால்கள் சுவாரசியமானவை இவைகளைக் கடந்தால் தான் நாம் வாழ்க்கையில், அடுத்த கட்டத்திற்கு போக முடியும் என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

English summary
Music director Cum Actor G.V.Prakash Says” After crossing the challenges in life can go to the next level.
Please Wait while comments are loading...