»   »  10 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவில் நடிக்கும் காயத்ரி ரகுராம்

10 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவில் நடிக்கும் காயத்ரி ரகுராம்

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

நடனம், நடிப்பு என தமிழ் சினிமாவில் வலம் வந்த காயத்ரி ரகுராம், பத்தாண்டுகளுக்குப் பின்னர் வை ராஜா வை என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.

நடன இயக்குனர்கள் ரகுராம் - கிரிஜா தம்பதியரின் அன்பு மகள் காயத்ரி ரகுராம். சிறு வயதிலிருந்து நடனம் கற்று வந்தவர், பிரபு தேவா நடித்த "சார்லி சாப்ளின்' படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

சினிமா சான்ஸ் சரியில்லை

சினிமா சான்ஸ் சரியில்லை

தொடர்ந்து "விசில்', "விகடன்', "பரசுராம்', "ஸ்டைல்' என ஐந்து தமிழ் படங்களிலும், "ரேப்பள்ளிலோ ராதா', "மா பாபு பொம்மாக்கி பெள்ளான்டா' ஆகிய தெலுங்கு படங்களிலும், "நட்சத்திர கண்ணுள்ள ராஜகுமாரன்' என்ற மலையாள படத்திலும், "மனசெல்லா நீவே' என்கிற கன்னடப் படம் என ஒன்பது திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்கா மாப்பிள்ளை

அமெரிக்கா மாப்பிள்ளை

அதன் பிறகு, அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கு செட்டிலானார். மணவாழ்க்கையில் கசப்பு ஏற்படவே திரைப்படம் இயக்கம் தொடர்பான படிப்பை படித்துவிட்டு சென்னை திரும்பினார்.

நடன இயக்குநராக

நடன இயக்குநராக

கந்தசாமி, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியானர். டிவியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்து மார்க் போட்டார்.

மீண்டும் சினிமாவில்

மீண்டும் சினிமாவில்

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்கின் அக்காவாக நடிக்கிறாராம்.

அக்காவாக நடிப்பேன்

அக்காவாக நடிப்பேன்

காயத்ரி ரகுராம், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவில் திருமணமாகி விட்ட நடிகைகளுக்கு ஹீரோ யினாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். அதனால் பெரிய ஹீரோக்களுக்கு சகோதரியாக, அண்ணியாக வலுவான கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன். வில்லி வேடம் கிடைத்தாலும் நடிப்பேன் என்று கூறியிருந்தார். சொன்னது போலவே அக்கா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ்

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை.' கதாநாயகனாக கவுதம் கார்த்திக், கதாநாயகி பிரியா ஆனந்த், விவேக், டைரக்டர் எஸ்.எம்.வசந்த், ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக இயக்குநர் வசந்த் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actress Gayathri Raguramm,who was last seen in a full fledged role in Vikadan way back in 2003, is set to make a comeback of sorts. The actress-choreographer will be seen next in Aishwaryaa Dhanush's Vai Raja Vai. Gayathri had tweeted, "After 10 years, I'm acting in a movie.Very excited. Hope you all like me on screen again.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more