»   »  தனுஷுக்கும் சரி, நயனுக்கும் சரி வில்லன்னா அது கவுதம் மேனன் தான்

தனுஷுக்கும் சரி, நயனுக்கும் சரி வில்லன்னா அது கவுதம் மேனன் தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் கவுதம் மேனன் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

ஆக்ஷனாகட்டும், காதலாகட்டும் அதை இயக்குனர் கவுதம் மேனன் சொல்லும் விதமே தனி. கவுதம் தற்போது தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை எடுத்து வருகிறார்.

கவுதம் இயக்கம் தவிர்த்து நடிக்கவும் செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லத்தனம் செய்ய ஏற்ற நபரை தேடிக் கொண்டிருந்தனர். அப்போது அஜய்க்கு கவுதம் மேனனின் நினைவு வந்தது.

கவுதம்

கவுதம்

அஜய் கவுதம் மேனனை அணுகி நான் இயக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் நீங்கள் தான் சார் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இமைக்கா நொடிகளில் நடிக்க கவுதம் முதலில் தயங்கியுள்ளார்.

வில்லன்

வில்லன்

அஜய் தனது படத்தின் முழுக் கதையையும் கூறிய பிறகு வில்லனாக நடிக்க கவுதம் மேனன் ஒப்புக் கொண்டுள்ளார். படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்குகிறது.

நயன்தாரா

நயன்தாரா

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா அத்ரவாவின் ஜோடி கிடையாது. நேர்மையான போலீஸ் கமிஷனராக நடிக்கிறாராம் நயன். நயன் போலீஸ் என்றால் கவுதம் என்ன மாதிரியான வில்லனாக இருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

தனுஷுக்கும்

தனுஷுக்கும்

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை கவுதம் இயக்க மட்டும் இல்லை தனுஷுக்கு வில்லனே அவர் தானாம். வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் கவுதம்.

English summary
Director Gautham Menon has agreed to be a baddie in Ajay Gnanamuthu's Imaikka Nodigal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil