ரோபோ சங்கர் அண்ணே விட்டுட்டுப் போயிட்டீயே.. துக்கம் தொண்டையை அடைக்க ஓடிவந்த சிவகார்த்திகேயன்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பலர் நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் காலையிலேயே வளசரவாக்கத்தில் உள்ள ரோபோ சங்கரின் வீட்டுக்கு ஓடி வந்து இறுதி மரியாதையை செலுத்திச் சென்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எப்படி சிவகார்த்திகேயன் கிடைத்தாரோ அவரை போலவே கிடைத்தவர் தான் ரோபோ சங்கரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இருவரும் இணைந்து பல அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் செய்த காமெடி ரகளை தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்கள் எப்படி சிரிக்க வைத்த மனுஷன் இவ்வளவு சீக்கிரமா போய்விட்டாரே என புலம்பி வருகின்றனர்.
தனுஷ் நேரில் அஞ்சலி: நடிகர் தனுஷ் முதல் ஆளாக ரோபோ சங்கரின் மறைவை அறிந்ததும் அதிகாலையிலேயே அவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிய காட்சிகள் வெளியாகின. இந்திரஜா சங்கருக்கு ஆறுதல் கூறிய தனுஷின் காட்சிகள் சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. மாரி படத்தில் தனுஷ் உடன் இணைந்து ரோபோ சங்கர் செய்த காமெடி காட்சிகள் என்றைக்கும் மறக்காது.

உதயநிதி ஸ்டாலின் உருக்கம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் காலையிலேயெ வீட்டுக்கு வந்து ரோபோ சங்கருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். ராதா ரவி, தாமு, எம்.எஸ். பாஸ்கர், மதுமிதா, கேபிஒய் பாலா என ஏகப்பட்ட பிரபலங்களும் சின்னத்திரை நடிகர்களும் ரோபோ சங்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி: அண்ணன் தம்பியாக விஜய் டிவியில் இருந்தே பழகிய சிவகார்த்திகேயன் சினிமாவிலும் மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் ரோபோ சங்கரை காமெடி நடிகராக தனது படங்களில் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவு சிவகார்த்திகேயனை ரொம்பவே மன வேதனையில் ஆழ்த்தியது. ஓடோடி அவர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும், பல முன்னணி நடிகர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











