பிக்பாசிற்கு பிறகு சஞ்சீவ் போட்ட முதல் ட்வீட்...என்ன சொல்லிருக்கார் தெரியுமா ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சஞ்சீவ். வைல்ட் கார்டு என்ட்ரியாக 50 வது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இருந்தாலும் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

Recommended Video

பிக்பாசிற்கு பிறகு சஞ்சீவ் போட்ட முதல் ட்வீட்...என்ன சொல்லிருக்கார் தெரியுமா ?

நடிகர் விஜய்யின் நண்பர், சின்னத்திரை பிரபலம் என்ற அடையாளத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த சஞ்சீவ், அனைவரையும் சரியாக கணித்து, வந்த சில நாட்களிலேயே அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கினார். சக போட்டியாளர்கள், மக்கள் என பலரிடமும் வரவேற்பை பெற்றார்.

இரண்டு படங்களில் ஒப்பந்தம்

இரண்டு படங்களில் ஒப்பந்தம்

50 வது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சஞ்சீவ் கடந்த வாரம் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருவதற்கு முன்பே தனக்கு இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக, வீட்டிற்குள் வந்த போது தனது மனைவி கூறியதாக கமலிடம் பிக்பாஸ் மேடையில் சஞ்சீவ் கூறினார்.

முதல் ட்வீட் போட்ட சஞ்சீவ்

முதல் ட்வீட் போட்ட சஞ்சீவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, சஞ்சீவிற்கு அவரது வீட்டில் அளிக்கப்பட்ட வரவேற்பு வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலானது. தனக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வருண், அக்ஷரா ஆகியோரை சஞ்சீவ் சந்தித்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு முதல் ட்வீட்டை போஸ்ட் செய்துள்ளார்.

திரும்பி வந்துட்டேன்

திரும்பி வந்துட்டேன்

அதில், நான் திரும்பி வந்து விட்டேன் நண்பர்களே. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லோரும் நன்றாக உள்ளீர்கள் என நம்புகிறேன். அனைவரும் எனக்கு அளித்த அளவில்லாத அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. ஒட்டுமொத்தமாக மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யை மீட் பண்ணுங்க

விஜய்யை மீட் பண்ணுங்க

சஞ்சீவ்வின் ட்வீட்டை பார்த்து விட்டு பலரும், நன்றாக விளையாடினீர்கள். அரசியல் டாஸ்கில் மிக அற்புதமாக செய்தீர்கள். விஜய்யின் பெயரை பயன்படுத்தாமல் உங்களின் தனிப்பட்ட குணம், திறமையை காட்டி விளையாடி உள்ளீர்கள். அப்படியே விஜய்யை மீட் பண்ணி ஒரு ஃபோட்டோ போஸ்ட் போடுங்கன்னா என பாராட்டி வருகின்றனர். சஞ்சீவ்வின் ட்வீட்டை பார்த்து விட்டு பலரும், நன்றாக விளையாடினீர்கள். அரசியல் டாஸ்கில் மிக அற்புதமாக செய்தீர்கள். விஜய்யின் பெயரை பயன்படுத்தாமல் உங்களின் தனிப்பட்ட குணம், திறமையை காட்டி விளையாடி உள்ளீர்கள். அப்படியோ விஜய்யை மீட் பண்ணி ஒரு ஃபோட்டோ போஸ்ட் போடுங்கன்னா என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X