விவாகரத்திற்கு பின் முதல் முறையாக மனைவி, மகளை பார்த்த பாலா...மகள் செய்த காரியத்தை பாருங்க
சென்னை : டைரக்டர் பாலா மற்றும் அவரது மனைவிக்கு சட்டப்படி கோர்ட் மூலம் விவாகரத்து கிடைத்த பிறகு, சமீபத்தில் ஒரே திருமண விழாவில் இருவரும் கலந்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பாலாவை பார்த்ததும் அவரது மகள் செய்த விஷயம் தொடர்பான வீடியோ தான் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
டைரக்டர் பாலாவுக்கும், அவரது மனைவி முத்துமலருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர். பாலா தனது வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது, மலர் அடிக்கடி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, பாடகி சைந்தவி மற்றும் அவரது தொழில்துறையைச் சேர்ந்த தோழிகளுடன் இருப்பதை காண முடிந்தது.

விவாகரத்து பெற்ற பாலா
இறுதியில் இயக்குனர் பாலாவும், மலரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். குடும்ப நீதிமன்றத்தில் அவர்களது விவாகரத்து வழக்கு நடந்தது. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் மார்ச் 5 ம் தேதி இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து வழங்கியது நீதிமன்றம். பாலா-முத்துமலர் தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. பாலாவுக்கும் முத்துமலருக்கும் ஜூலை 5, 2004 அன்று மதுரையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. 17 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு' அவர்கள் அதை விட்டு வெளியேற முடிவு செய்து, விவாகரத்து பெற்றனர்.

சூர்யா படத்தில் பிஸி
தற்போது இயக்குனர் பாலா, நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் இயக்க போகிறார். பாலா இயக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷுட்டிங் மார்ச் 18 ம் தேதி மதுரையில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மதுரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமண விழாவில் சந்திப்பு
இந்நிலையில் சமீபத்தில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக பிரமுகர் மருத்துவர் மகேந்திரனின் மகன் கீர்த்தனுக்கும் திருமணம் நடந்தது. இந்த விழாவில் அரசியல், சினிமாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குனர் பாலாவும் இந்த திருமணத்துக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதே திருமண விழாவுக்கு பாலாவின் மனைவி முத்துமலரும் தனது மகள் பிரார்த்தனாவுடன் கலந்து கொண்டார்.
Recommended Video

பாலா மகள் செய்த காரியம்
திருமணத்தில் அப்பாவை பார்த்த பிரார்த்தனா, ஓடி வந்து பாலாவின் மடியில் சென்று அமர்ந்து கொண்டார். நீண்ட நேரம் பாலாவின் மடியில் அமர்ந்து, அவரது மகள் பேசிக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு பின் வரிசையில் அமர்ந்தபடி தனது அப்பாவுடன் பேசும் வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விவாகரத்து பெற்ற பிறகு பாலா முதல் முறையாக தனது மகளை பார்த்துள்ளார். இதே விழாவில் பாலாவின் மனைவி முத்துமலரும் கலந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











