குட் பை... ஹனிமூன் கடைசிநாள் போட்டோக்களை வெளியிட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்

சென்னை : ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்து சென்ற நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் அடுத்த பிளான் என்ன என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர்.

Recommended Video

Nayan-Wikki Kerala-வில் சாமி தரிசனம் | Chettikularanga Temple *Celebrity | Filmibeat Tamil

நானும் ரெளடி தான் படத்தில் துவங்கி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக போகிறது.

ஆனாலும் தொடர்ந்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தான் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இவர்களின் அடுத்த போட்டோ, வீடியோக்கள் எப்போது வெளிவரும் என பார்க்க அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

இந்த போட்டோ எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க

இந்த போட்டோ எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண போட்டோ கலெக்ஷன், வீடியோக்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில போட்டோக்களை மட்டுமே விக்னேஷ் சிவன் வெளியிட்டார். மீதமுள்ள போட்டோக்கள், குறிப்பாக ரஜினி, விஜய் உள்ளிட்ட விஐபி.,க்கள் வந்து வாழ்த்திய போட்டோக்கள் எப்போது வெளியிடப் போகிறார்கள் என இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

நெட்ஃபிளிக்ஸ் சத்தமே காட்டிலியே

நெட்ஃபிளிக்ஸ் சத்தமே காட்டிலியே

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஒளிபரப்பு உரிமத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் அந்த போட்டோக்கள், வீடியோக்களை எப்போது வெளியிட போகிறது என இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை. நயன்தாரா திருமணத்தை டாக்குமென்ட்ரியாக எடுத்த கெளதம் மேனனாவது அது பற்றி ஏதாவது சொல்வார் என்று பார்த்தால், அவரும் இப்போது வரை மெளனமாக இருப்பதுடன், அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

அடுத்த நாளே பிரச்சனை

அடுத்த நாளே பிரச்சனை

இதற்கிடையில் திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு போய் ஏழுமலையானை தரிசனம் செய்த நயன் - விக்கி ஜோடி, அங்கு போட்டோஷுட் நடத்திய போது காலில் செருப்பு அணிந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணம் செய்த அடுத்த நாளே பிரச்சனை ஆரம்பித்ததால் அவசர அவசரமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பி, விவகாரத்தை முடித்து வைத்தார் விக்னேஷ் சிவன்.

கேரளாவில் ஜாலி ட்ரீப்

கேரளாவில் ஜாலி ட்ரீப்

அடுத்து சென்னை வந்து செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்த நயன் - விக்கி ஜோடி, கொச்சியில் உள்ள நயன்தாராவின் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கும் கோயில்களில் சாமி தரிசனம், பிறகு ஜாலியாக ஊர் சுற்றினர். போகிற இடமெல்லாம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஃபேன்ஸ் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியாகி டிரெண்டிங்கில் கலக்கின.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஹனிமூன் செல்லாமல், சினிமா வேலைகளை கவனிக்க போகிறார்கள் என முதலில் கூறப்பட்டது. இதனால் கொச்சியில் இருந்து சென்னை வருவார்கள் என்று பார்த்தால், இருவரும் ரகசியமாக கிளம்பி தாய்லாந்து போய் விட்டனர். கொச்சியில் இரண்டு வாரங்கள் இவர்கள் தங்கியிருக்க போகிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தாய்லாந்தில் கடந்த ஒரு வாரமாக ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளனர்.

நயன்தாராவிடம் இதை கவனிச்சீங்களா

நயன்தாராவிடம் இதை கவனிச்சீங்களா

திருமணம் முடிந்ததும் கோயிலில் சாமி தரிசனம் செய்த போட்டோக்களை வெளியிடுகிறார்களே என்று பார்த்தால், ஹனிமூனில் செம ரொமான்டிக்கான போட்டோக்களை தாராளமாக எடுத்து, சோஷியல் மீடியாவை திணறித்து விட்டனர். இவரும் மாறி மாறி எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி விட்டனர். இதில் ஹைலைட் என்னவென்றால் திருமணத்திற்கு பிறகு மாடர்ன் டிரெசிலேயே அதிக போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. இதில் ஒன்றில் கூட அவர் தனது தாலியை மறைக்காமல், புது தாலி வெளியில் தெரியும் அளவிலேயே போஸ் கொடுத்திருக்கிறார் என்பது தான்.

தாய்லாந்தில் ஹனிமூன் ஓவர்

தாய்லாந்தில் ஹனிமூன் ஓவர்

அடுத்து என்ன போட்டோ வெளியிட போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், தாய்லாந்தில் ஹனிமூனை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய வீடியோ வெளியாகி உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி புறப்படும் போது அங்கிருந்த ஓட்டல் ஊழியர்கள் வாசல் வரை வந்து டாட்டா சொல்லி வழியனுப்பி வைத்துள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த ஜோடியின் அடுத்த பிளான்

இந்த ஜோடியின் அடுத்த பிளான்

அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த நயன் - விக்கி திருமணம், ஹனிமூன் ட்ரிப் முடித்து விட்டார்கள். இவர்களின் அடுத்து பிளான் என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. லேட்டஸ்ட் தகவலின் படி நயன்தாரா தற்போது நடித்து வரும் ஜவான், பாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து முடிக்க போகிறாராம். விக்னேஷ் சிவனும் ஏகே 62 வேலைகளை துவக்க போகிறாராம். ஏகே 62 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாரா இல்லையா, தற்போது கைவசம் வைத்துள்ள படங்களை முடித்த பிறகு என்ன பிளான் வைத்துள்ளார் என்பதை தற்போது வரை பயங்கர சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X