உயர்த்தப்படும் பரிசுத்தொகை...மாறும் போட்டியாளர்கள் மனநிலை...ஓட்டுப்பதிவு சொல்வதென்ன?
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இதில் இந்த வாரம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நாமினேஷன் தவிர்த்து, பிக்பாஸ் அனுப்பி உள்ள பணப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள தொகையுடன் வெளியேற போகிறவர் யார் என்பது தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
நேற்றைய எபிசோடில் ரூ.3 லட்சம் இருக்கும் கற்கள் பதிக்கப்பட்டு தகதகக்கும் பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சரத்குமார், யாராவது ஒருவர் தான் டை்டிலை ஜெயிக்க போகிறார். அதனால் அனைவரும் யோசித்து முடிவு செய்யுங்கள் என அறிவுரை வழங்கி விட்டு சென்றார்.

இவ்வளவு குறைந்த தொகையா
நேற்று சரத்குமார் பணப்பெட்டியுடன் வந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, வெறும் 3 லட்சம் தானா. இதை விட பெட்டியை கொண்டு வந்த சரத்குமாருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வளவு குறைவான தொகையை எடுத்துக் கொண்டு யார் வெளியேறுவார்கள் என சோஷியல் மீடியாவில் பலர் கேட்டனர். நிரூப்பும் ரூ.50 லட்சம் தானே கூடுதலாக வெற்றியாளருக்கு கிடைக்க போவது என்றார்.

உயரும் பரிசுத்தொகை
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் காலையிலேயே பரிசுத்தொகை ரூ.5 லட்சமாகவும், பிறகு சிறிது நேரத்தில் ரூ.7 லட்சமாகவும் மாற்றப்பட்டதை போல் காட்டப்பட்டுள்ளது. நேற்று 3 லட்சத்தை பார்த்ததும் யாரும் எடுக்க மாட்டார்கள் என அமீர் கூறினார். ஆனால் தான் எடுக்க வாய்ப்புள்ளதாக நிரூப் மற்றும் பாவனி மட்டுமே சொன்னார்கள். ராஜுவும், பிரியங்காவும் அதை கண்டுகொள்ளவேயில்லை.

மாறும் போட்டியாளர்கள் மனநிலை
நேற்று பணத்தை பற்றி பேசாதவர்கள், இன்று அதை பற்றிய ஆலோசனையை துவக்கி உள்ளனர். 5 லட்சம் இருக்கும் பெட்டியை பார்த்து விட்டு, இதோடு ஒரு 4, ஒரு ஜீரோ இருந்தால் நான் எடுத்துக் கொண்டு போய் கொண்டே இருப்பேன் என்கிறார் பிரியங்கா. 15 லட்சம் இருந்தால் யோசிக்கலாம் என்கிறார் பாவனி. இந்த தொகை 25 லட்சம் வரை போகலாம் என்கிறார் நிரூப். ஆனால் எவ்வளவு வைத்தாலும் எடுக்க மாட்டேன் என்கிறார் தாமரை.

கருத்து கணிப்பு சொல்வதென்ன
பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை படிப்படியாக உயர உயர போட்டியாளர்களின் மனநிலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கிடையில் நேற்று, பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு யார் வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்பது பற்றி ஆன்லைனில் சில கருத்துக்கணிப்புக்கள், ஓட்டுப்பதிவுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்படி தாமரை, பாவனி, நிரூப், சிபி, அமீர் ஆகியோரில் ஒருவர் தான் பணப்பெட்டியை எடுப்பார்கள் என இணையதள வாசிகள் தெரிவித்துள்ளனர்.

யார் எடுக்க அதிக வாய்ப்பு
இந்த ஓட்டுப்பதிவின்படி தாமரை பணத்தை எடுப்பார் என 52.7 சதவீதம் பேரும், பாவனி எடுப்பார் என 19.7 சதவீதம் பேரும், நிரூப் அல்லது சிபி எடுப்பார்கள் என 15.6 சதவீதம் பேரும், அமீர் எடுப்பார் என 12.1 சதவீம் பேரும் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 லட்சம் கொடுத்தாலும் போக மாட்டேன் என நிரூப் ஏற்கனவே கூறி விட்டதால், அவர் இந்த பணத்தை தொட மாட்டார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Recommended Video

எல்லாமே மாறுமே
பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு, போட்டியாளர்கள் மனநிலையிலும் மாற்றம் வர துவங்கி உள்ளதால் இந்த ஓட்டு சதவீதமும் மாற வாய்ப்புள்ளது. தற்போது 7 லட்சமாக உயர்த்தப்படும் தொகை, அடுத்து எவ்வளவாக உயரும், இன்னும் யாருடைய மனநிலையில் என்னனென்ன மாற்றம் வரும் என கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











