»   »  2வது பொண்ணும் என் தலையில் குண்டை தூக்கிப் போட்டுட்டா: ஸ்ரீதேவி

2வது பொண்ணும் என் தலையில் குண்டை தூக்கிப் போட்டுட்டா: ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மூத்த மகள் ஜான்வியை போன்றே இரண்டாவது மகள் குஷியும் தனது தலையில் குண்டை தூக்கிப் போட்டுவிட்டதாக நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் நல்லவிதமாக தெரிவித்து வருகிறார்கள். இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் அவர் தனது இரண்டாவது மகள் குஷியை பற்றி பேசியுள்ளார்.

ஜான்வி

ஜான்வி

மூத்த மகள் ஜான்வி நடிகையாக விரும்புவதாக தெரிவித்தபோது தனது தலையில் குண்டை தூக்கிப் போட்டது போன்று இருந்ததாக ஸ்ரீதேவி தெரிவித்தார். ஜான்வி நடிகையாவதை ஸ்ரீதேவி முதலில் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஷி

குஷி

என் இரண்டாவது மகள் குஷி முன்பெல்லாம் டாக்டர் ஆவேன் என்றார், பின்னர் வழக்கறிஞர் என்றார். தற்போதோ மாடலிங் செய்ய வேண்டும் என்று குண்டை தூக்கிப் போட்டுள்ளார் என்கிறார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஜான்வி கொடுத்த அதிர்ச்சி பெரிதாக இருந்தது. இந்நிலையில் குஷி மாடலாக ஆகப் போகும் ஷாக்கையும் தாங்க தயாராகி வருகிறேன். குஷி தனக்கு பிடித்ததை செய்யவே நான் விரும்புகிறேன் என ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

நடிகை

நடிகை

குஷி படங்களில் நடிக்க விரும்பினாலும் அது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்காது. ஏற்கனவே ஜான்வி அந்த அதிர்ச்சியை கொடுத்துவிட்டார். என் மகள்களுக்கு ஃபேஷனில் அதிக ஈடுபாடு உள்ளது என்று ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

English summary
Bollywood actress Sridevi Kapoor revealed that her younger daughter Khushi wants to get into modelling and she is waiting for that shock to happen.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil