»   »  கபாலி புயலுக்குப் பிறகு.... அணி வகுக்கும் புதுப் படங்கள்!

கபாலி புயலுக்குப் பிறகு.... அணி வகுக்கும் புதுப் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜினி நடித்த கபாலி ஜூலை 22-ம் தேதி வெளியானது. இதையொட்டி பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் தள்ளிப் போயின.

ஜோக்கர், தொடரி, தர்மதுரை போன்ற படங்கள் ஜூலையில் வெளியாக இருந்த நிலையில் கபாலி படம் வந்ததால் தள்ளிப் போயின.

After Kabali storm.. here is the list of upcoming movies

இப்போது கபாலி புயல் கரையைக் கடந்துள்ளது. ஆனாலும் இன்னும் ஒரு வாரத்துக்கு கபாலியின் தாக்கம் திரையரங்குகளில் இருக்கும் என்பதால், ஆகஸ்ட் 12-ம் தேதி இயக்குநர் ராஜூமுருகனின் ஜோக்கர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள தர்மதுரை, கே.எஸ். ரவிகுமார் இயக்கியுள்ள முடிஞ்சா இவனை பிடி, விக்ரம் பிரபுவின் வாகா, தனுஷின் தொடரி போன்ற படங்களும் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகத் தயாராகியுள்ளன.

இந்தப் படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
After the release of Rajini's Kabali 'storm', various new movie are scheduled for release in August 2nd week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil