கமல் மட்டும் தான் கொடுப்பாரா...நாங்களும் கொடுப்போம்...அசத்திய ஆர்ஜே பாலாஜி

சென்னை : நடிகர் கமல் பாணியில் படக்குழுவிற்கு பரிசுகளை வாரி வழங்கி அசத்தி உள்ளார் நடிகர் ஆர்ஜே பாலாஜி. இப்போது இதை பற்றிய தகவல்கள் தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Veetle Vishesham | பரிசுகளை வாரி வழங்கிய RJ Balaji *Kollywood | Filmibeat Tamil

ஆரம்பத்தில் காமெடி ரோல்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, பிறகு லீட் ரோல்களில் நடிக்க துவங்கினார். இவர்களின் வித்தியாசமான காமெடி படங்களுக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அப்படி சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம் தான் வீட்ல விசேஷங்க. சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்திருந்த இந்த படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷங்க

வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷங்க

விக்ரம் படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் என்றால் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷங்க படம் தான். 2018 ம் ஆண்டு இந்தியில் ரிலீசாகி ஹிட்டான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இந்த படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இயக்கி இருந்தார். போனி கபூரின் பேவ்யூ ப்ராஜக்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

பரிசுகளை வாரி வழங்கிய ஆர்ஜே பாலாஜி

பரிசுகளை வாரி வழங்கிய ஆர்ஜே பாலாஜி

தியேட்டர்களில் வீட்ல விசேஷங்க படத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து வருவதால், இதன் வெற்றியை தொண்டாட ஆர்ஜே பாலாஜி படக்குழுவிற்கு பரிசுகளை வாரி வழங்கி உள்ளார். படத்தின் சக்சஸ் சீட் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்களில் ஒருவருக்கு காஸ்ட்லி வாட்ச் பரிசளித்துள்ளார். டைரக்டர் சரவணனுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார். அதோடு படத்தின் அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கு செக் வழங்கி உள்ளார்.

புலியை பார்த்து பூனை சூடு போடலாமா

புலியை பார்த்து பூனை சூடு போடலாமா

சமீபத்தில் விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக நடிகர் கமல், படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு காஸ்ட்லி கார் பரிசளித்தார். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக் பரிசளித்தார். படத்தின் க்ளைமாக்சில் ரோலக்ஸ் ரோலில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார். தற்போது இதற்கு போட்டியாக ஆர்ஜே பாலாஜியும் தனது படக்குழுவிற்கு பரிசுகளை வழங்கி உள்ளார்.

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல

இதை பார்த்த ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. படங்களில் தான் மற்றவர்களை கிண்டலடிக்கிறீர்கள் என்றால் நிஜத்திலுமா. அதுவும் கமலையா. கமல் பரிசு வழங்குகிறார் என்றால் அவர் படத்தின் தயாரிப்பாளர், லெஜணட், சீனியர். அது மட்டுமில்லாமல் விக்ரம் படம் 400 கோடிகளை தாண்டி வசூலை வாரி குவித்து வருகிறது. அவருடன் போய் போட்டி போடுகிறீர்களே என பரிதாபமாகவும், நக்கலாகவும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X