கவினின் அடுத்த என்ட்ரி...டைட்டிலுடன் வெளிவந்த அசத்தல் அப்டேட்
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். சின்னத்திரையில் பிரபலமான நடிகரான கவின், பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்றார். இதில் பெரிய அளவில் பேசப்பட்டு, அதிக ரசிகர்களை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லிஃப்ட் படத்தில் நடித்து வந்தார் கவின். இதில் பிகில் பட நடிகையான அமிர்தா அய்யருக்கு ஜோடியாக நடிக்கிறார் கவின். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. தற்போது ஃபோஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

வெப்சீரிசில் நடிக்கிறார் கவின்
லிஃப்ட் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அடுத்தபடியாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க போகிறாராம் கவின். இதற்கு ஆகாசவானி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் பற்றிய மற்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நெல்சனிடம் அசிஸ்டென்ட் டைரக்டர்
இருந்தாலும் இந்த வெப்சீரிஸின் பூஜை ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிப்பதுடன் டைரக்டர் நெல்சன் திலீப்குமாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராகவும் பணியாற்றி வருகிறார் கவின்.

விஜய்யின் பீஸ்ட்டிலும் கவின்
நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இதுவரை நெல்சன் இயக்கிய அனைத்து படங்களிலும் அசிஸ்டென்ட் டைரக்டராக கவின் பணியாற்றி உள்ளார். பீஸ்ட் படத்திலும் கவின் பணியாற்றி வருகிறார்.

விரைவில் வெப்சீரிஸ் பணிகள்
பீஸ்ட் படத்தின் வேலைகள் விரைவில் நிறைவடைய உள்ளதாம். அதற்குள் லிஃப்ட் படமும் ரிலீசுக்கு தயாராகி விடுமாம். இந்த இரண்டு படங்களின் வேலைகள் நிறைவடைந்ததும் வெப்சீரிஸில் கவின் நடிக்க துவங்க உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











