For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாநாடு சென்டிமென்ட்.. மீண்டும் இணைந்த சிம்பு - ஹன்சிகா ஜோடி.. மாஸ் காட்ட காத்திருக்கும் மஹா!

  |

  சென்னை: சிம்பு - ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் வரும் ஜூலை 22ம் தேதி வெளியாக உள்ளது.

  இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் நடிகை ஹன்சிகாவுக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்தில் முதலில் கேமியோ ரோலில் குறைந்த நேரத்திற்கே கமிட் ஆன சிம்பு, ஒரு பெரிய ரோல் செய்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக மாறி உள்ளது.

  பத்து தல-க்காக பயிற்சி செய்த சிம்பு.. கௌதம் கார்த்திக்கும் செஞ்சாராமே.. இயக்குநர் கொடுத்த அப்டேட்! பத்து தல-க்காக பயிற்சி செய்த சிம்பு.. கௌதம் கார்த்திக்கும் செஞ்சாராமே.. இயக்குநர் கொடுத்த அப்டேட்!

  50வது படம்

  50வது படம்

  ஹன்சிகாவின் 50 வது திரைப்படமான மஹா 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திரைப்படமாகும். இதில் கேமியோ ரோலில் நடிக்க சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவுடனான பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். சிம்பு படத்திற்குள் நுழைந்ததும் அவரின் கதாபாத்திரம் அதிகம் வரும் படி கதை நீட்டிக்கப்பட்டது. இந்த படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. க்ரைம், த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

  லீடு ரோலில் ஹன்சிகா

  லீடு ரோலில் ஹன்சிகா

  முன்னணி நடிகை ஹன்சிகா கடைசியாக அதர்வாவுடன் 100 படத்தில் நடித்திருந்தார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷாவை போல ஹன்சிகாவும் உமன் சென்ட்ரிக் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மஹா, ரவுடி பேபி என அடுத்தடுத்து தூள் கிளப்ப காத்திருக்கிறார் ஹன்சிகா. வாலு படத்திற்கு பிறகு மீண்டும் சிம்புவுடன் ஹன்சிகா இணைந்து நடித்து வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறது.

  மாநாடு சென்டிமென்ட்

  மாநாடு சென்டிமென்ட்

  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றுள்ளது. இத்திரைப்படம் சிம்புவுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. மாநாடு படத்தின் வெற்றி சென்டிமென்ட் மஹா திரைப்படத்துக்கும் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சிம்புவை பார்க்க

  சிம்புவை பார்க்க

  ஹன்சிகா மற்றும் சிம்பு நடித்துள்ள மஹா படத்தை சிம்புவை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பா டி ராஜேந்தருக்காக அமெரிக்கா வரை சென்று அனைத்து சினிமா பணிகளையும் நிறுத்திய நிலையில், மீண்டும் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி இருக்கிறார் சிம்பு. சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக சிம்பு இந்த படத்தில் வர உள்ள நிலையில், அவரது பஞ்ச் வசனம், ஆக்‌ஷன், அதிரடி, ரொமான்ஸ் என ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் ரசிகர்களுக்கு இந்த படத்தில் காத்திருப்பதாக அதன் மேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

  மீண்டும் ஹீரோயினாக

  மீண்டும் ஹீரோயினாக

  மஹா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து இருவரும் இணைந்து பல படங்கள் செய்வார்களா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெந்து தணிந்தது காடு, பத்து தல என பிசியாகி உள்ள சிம்பு, மீண்டும் தனது படத்தில் ஹன்சிகாவை ஹீரோயினாக ஆக்க வேண்டும் என்றும்ர் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  பிக் பாஸ் பிரபலங்கள்

  பிக் பாஸ் பிரபலங்கள்

  Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலங்களான சனம் ஷெட்டி, மகத் ராகவேந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், தம்பி ராமைய்யா, சுஜித் சங்கர், கருணாகரன், நந்திதாஜெனிஃபர் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மதி ஒளிப்பதிவு. ஜான் ஆபிரகாம் எடிட்டிங் செய்துள்ள இந்த திரைப்படம் வரும் ஜூலை 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

  English summary
  After Maanaadu blockbuster, Simbu will seen soon in Hansika's Mahaa. This long awaited movie will release on July 22 this week. Simbu's extended cameo will give audience more fun and entertainment.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X