வெங்கட் பிரபுவின் அடுத்த படம் யாருடன்... அசத்தலாக வெளியான தகவல்

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் டைரக்டர்களில் ஒருவர் தான் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தில் துவங்கி தற்போது வரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது தான் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள மாநாடு படம், இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படத்தில் முதல் முறையாக இஸ்லாமிய இளைஞர் ரோலில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் ஃபஸ்ட் லுக், முதல் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டாவது சிங்கிள் எப்போ

இரண்டாவது சிங்கிள் எப்போ

மாநாடு படத்தின் இரண்டாவது சிங்கிளையும் யுவன் தயார் செய்து முடித்து விட்டதாகவும், விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் சமீபத்தில் வெங்கட் பிரபு கூறி இருந்தார். இதனால் எந்த நேரமும் இரண்டாவது சிங்கிள் வெளியாகலாம் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இறுதிக்கட்ட பணியில் மாநாடு

இறுதிக்கட்ட பணியில் மாநாடு

அரசியல், சையின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள மாநாடு படத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷினி லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

என்ன இப்படி மாறிட்டார்

என்ன இப்படி மாறிட்டார்

மாநாடு படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கும் சிம்பு, அந்த படத்திற்காக 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். தனது புதிய படத்திற்காக சிம்பு ரொம்பவே மெனக்கெட்டுள்ளது, ரிலீசுக்கு காத்திருக்கும் மாநாடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

எப்போ ரிலீஸ் தெரியுமா

எப்போ ரிலீஸ் தெரியுமா

மாநாடு படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய போவதாக வெங்கட் பிரபு அறிவித்து விட்டார். இதனால் படத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு, ரிலீசுக்காக காத்திருக்கிறது. அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு மாநாடு படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படம் எப்போ

அடுத்த படம் எப்போ

மாநாடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக வெங்கட் பிரபுவின் அடுத்த படம் எப்போது, அடுத்து யாரை இயக்க போகிறார் என ஆர்வமாக கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். இது பற்றி விசாரித்த போது, வெங்கட் பிரபுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், அடுத்த படத்தின் ப்ரீப்ரொடக்ஷன் வேலைகளை வெங்கட் பிரபு ஏற்கனவே துவங்கி விட்டாராம்.

இத்தனை மொழிகளிலா

இத்தனை மொழிகளிலா

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் பான் இந்தியன் கதையாக உருவாக்கப்பட உள்ளதாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தியிலும் இந்த படம் வெளியிடப்பட உள்ளதாம். அனைத்து மொழி ரசிகர்களும் விரும்பும் படி படத்தின் கதை அமைக்கப்பட உள்ளதாம்.

இவரை தான் இயக்க போறாரா

இவரை தான் இயக்க போறாரா

சிம்புவை தொடர்ந்து கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப்பை தான் வெங்கட் பிரபு இயக்க போகிறாராம். இந்த படத்தில் நடிக்க சுதீப்பும் ஓகே சொல்லி விட்டாராம். இதனால் அவருக்கு ஏற்ற மாதிரி கதையை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறதாம்.

மாநாடு ரிலீசுக்கு பிறகு தான்

மாநாடு ரிலீசுக்கு பிறகு தான்

தயாரிப்பாளர், மற்ற கலைஞர்கள் பற்றிய ஆலோசனைகள் நடைபெற்று வருகிறதாம். இந்த ஆண்டு இறுதிக்குள் மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால், மாநாடு ரிலீஸ் ஆன பிறகு இந்த புதிய படத்தின் ஷுட்டிங் உள்ளிட்ட மற்ற விபரங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X