ஜெயமோகன் தான் மாற்றினார்; இவர் தான் அந்த அருண்மொழி...ஜெயமோகனை சீண்டும் ப்ளுசட்டை மாறன்
சென்னை : வழக்கமாக எந்த படம் ஹிட் ஆகி, ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறதோ அது பற்றி ஏடா கூடமாக ஏதாவது விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ப்ளுசட்டை மாறன்.
அஜித், வலிமை, விக்ரம், விக்ரம் படத்தின் வெற்றி ஆகியவை பற்றி விமர்சனம் செய்து பிரபலங்களிடமும், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். கடந்த சில நாட்களாக பொன்னியின் செல்வன் பற்றி பேசப்படுவதால், இவர் மணிரத்னம் பற்றி பேசி வம்பிழுத்தார்.
பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் போட்டோவை வெளியிட்டு, மணிரத்னம் தான் டீமில் உள்ள யாரையும் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியில் வரக் கூடாது என சொல்லி உள்ளார் என கமெண்ட் செய்திருந்தார். இதனை யாரும் பெரிதாக கண்டுவில்லை.

அருள்மொழி வர்மனா? அருண்மொழி வர்மனா?
இருந்தாலும் சமீப நாட்களாக பொன்னியின் செல்வன் பற்றி கடந்த சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் மற்றொரு விஷயத்தை கையில் எடுத்துள்ளார் ப்ளுசட்டை மாறன். அதாவது, பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி கேரக்டர் போஸ்டரில் அருள்மொழி வர்மன் என்பதற்கு பதில், அருண்மொழி வர்மன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலர் சுட்டிக் காட்டினர். மணிரத்னம் டீமில் சரியான தமிழ் தெரிந்தவர்கள் யாருமில்லையா என்று கூட கேள்வி எழுப்பப்பட்டது.

ஜெயமோகன் தான் மாற்றி விட்டார்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகனை குறிப்பிட்டு ப்ளுசட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். அதில், கல்கி உண்மையில் பயன்படுத்திய கேரக்டர் பெயர் அருள் மொழிவர்மன் தான். ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் அருண்மொழி வர்மன் என மாற்றி விட்டார்.

இவர் பெயர் தான் அருண்மொழியா
விக்கிபீடியா குறிப்பிட்டுள்ள தகவலின்படி பார்த்தால் ஜெயமோகனின் மனைவி பெயர் தான் அருண்மொழி நங்கை. பொன்னியின் செல்வன் எழுத்தாளர் கல்கிக்கான மரியாதையா அல்லது...? என குறிப்பிட்டுள்ளார். அதோடு, லட்சுமணசாமி ரங்கசாமி என்பவர், கல்கியை, அவரது பொன்னியின் செல்வனை திட்டி ஜெயேமாகன் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதியிருந்தார். இப்போது அவரது தளத்தில் அந்த கட்டுரைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பதிவையும் ப்ளுசட்டை மாறன் தனது ட்வீட்டில் இணைத்து பதிவிட்டுள்ளார.
Recommended Video

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
இதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி, அருள்மொழியா? அருண்மொழியா? இப்படியெல்லாம் நேரம் வீணடிக்காதீர்:) இரண்டுமே, இலக்கணப்படிச் சரி!
*அருள்மொழி= இயல்புப் புணர்ச்சி
*அருண்மொழி= விகாரப் புணர்ச்சி
அருள்+மொழி= அருண்மொழி
நிலைமொழி ளகர ஈறு (அரு'ள்')
வருமொழி மெல்லினத்தால் ('மொ'ழி)
ள->ண ஆகும்
லள மெலி மேவின் னண-வும் (நன்னூல்) என பலர் விளக்கம் அளித்து ப்ளுசட்டை மாறனை திட்டி வருகின்றனர். எப்பவும் எதாவது நெகட்டிவிட்டி பரப்பிட்டே இருக்கனும்ல, அப்ப தான் உன் பொழப்பு ஓடும் ... எவ்வள கேவலமான ஜென்மம் என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











