Don't Miss!
- News
மத்தியப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள்! ஆய்வில் ஏற்பட்ட உள்ள புதிய திருப்பம்
- Finance
ஆதார் கார்டு: NRI-களுக்கு ஆதார் ஏன் அவசியம்..? அப்ளை செய்வது எப்படி..?
- Automobiles
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க!
- Lifestyle
இந்த உணவுகளில் ஒன்றை காலையிலேயே சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்குமாம்!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Sports
திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஹன்சிகா திருமணத்தை தொடர்ந்து ஹனிமூனுக்கு போகலையாம்.. ஏன் தெரியுமா?
ஜெய்ப்பூர் : நடிகை ஹன்சிகா மற்றும் சோஹைல் திருமணம் நேற்றைய தினம் ஜெய்ப்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நிலையில், திருமணத்தின் ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த திருமணத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹன்சிகா எந்த நாட்டிற்கு ஹனிமூன் போவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தடபுடலாக
நடந்த
ஹன்சிகா
திருமணம்..நெற்றியில்
குங்குமம்
வைக்கும்
போது
ஆனந்த
கண்ணீர்
வடித்தார்!

நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ள ஹன்சிகா, தொடர்ந்து விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அரண்மனை படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து நடித்துள்ளார்.

குட்டி குஷ்பூ ஹன்சிகா
இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. குட்டி குஷ்பூ என்றே ஹன்சிகா ரசிகர்ளால் கொண்டாடப்பட்டார். அந்த பெயருடனே இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்தப் படங்களை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தொடர்ந்து தன்னுடைய உடலை ஸ்லிம்மாக்கி பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.

ஹன்சிகாவின் மகா படம்
ஆனாலும் பட வாய்ப்புகள் அந்த அளவிற்கு கிடைக்காத நிலையே தொடர்ந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் மகா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். வாலு படத்தில் நடித்தபோது இவர்களுக்கிடையில் காதல் ஏற்பட்டு பிரேக்கப்பும் ஏற்பட்ட நிலையில் மகா படம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஹன்சிகா -சோஹைல் திருமணம்
ஆனால் எதிர்பார்த்த அளவில் இந்தப் படம் கைகொடுக்காத நிலையில், தற்போது பிரபல தொழிலதிபர் சோஹைலை திருமணம் செய்துக் கொண்டுள்ளார் ஹன்சிகா. நேற்றைய தினம் இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக கடந்த நவம்பர் மாதம் முதலே இவர்களது திருமணக் கொண்டாட்டங்கள் துவங்கிய நிலையில், அடுத்தடுத்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

ஹனிமூன் செல்லும் திட்டமில்லை
நேற்றைய தினம் இவர்களது திருமணம் நடந்து முடிந்த நிலையில், கலர்புல்லான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து ஹன்சிகா மற்றும் சோஹைல் ஜோடி எங்கே ஹனிமூன் செல்லவுள்ளனர் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் உடனடியாக இவர்கள் ஹனிமூன் செல்லப் போவதில்லையாம். இன்னும் சில தினங்களில் விளம்பர சூட் ஒன்றில் ஹன்சிகா பங்கேற்கவுள்ளாராம்.

சூட்டிங்கில் பங்கேற்கும் ஹன்சிகா
தொடர்ந்து தன்னுடைய திரைப்படங்களின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்தே தன்னுடைய ஹனிமூனை அவர் திட்டமிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல தான் நடிகை நயன்தாராவும் தன்னுடைய திருமணம் முடிந்த கையோடு சூட்டிங்கிற்கு சென்றார். தற்போது அவரது பாணியை ஹன்சிகாவும் பின்பற்றவுள்ளார்.