விஜய்யுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் ஜானி மாஸ்டர்...எந்த படத்தில் தெரியுமா ?
சென்னை : விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தின் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யின் 66 வது படமான இந்த படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
Recommended Video
வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஃபிலிம்ஸ் பேனரில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்துடன் இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய ரோல்களிலும், பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு உள்ளிட்ட பலர் சப்போர்டிங் ரோல்களிலும் நடித்துள்ளனர்.

வாரிசு பட கதை
குடும்பத்தை மையப்படுத்திய கதையான வாரிசு படம் மனதை தொடும் வகையிலான குடும்ப பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆக்ஷன், மாஸ், நல்ல பாடல்கள் என அனைத்து கலந்த காம்போவாக ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கசிந்த வாரிசு போட்டோக்கள்
வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பார்ட் போட்டோக்கள், வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களையும், படக்குழுவினரையும் அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. லேட்டஸ்டாக வாரிசு படத்தின் பாடல் காட்சி ஒன்று லீக் ஆகி உள்ளது.

பிரபலம் தந்த அப்டேட்
தற்போது வாரிசு படத்தின் ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. படம் பற்றி பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்களுக்கு விஜய்யிடம் மிகவும் விஷயங்களில் ஒன்றான டான்ஸ் பற்றிய தகவலை பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அட இவரும் இருக்காரா படத்தில்
வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் பிரேக்கின் போது என குறிப்பிட்டு, தனது போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜானி மாஸ்டர். இதன் மூலம் வாரசு படத்திற்கும் ஜானி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. மாஸ்டர், பீஸ்ட் படங்களுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக விஜய்யின் வாரிசு படத்திலும் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார்.

வேற லெவலில் இருக்குமே
விஜய்க்கு என்று தனியாக ஸ்டையிலான, வித்தியாசமான ஸ்டெப்கள் அமைப்பதில் கைதேர்ந்தவர் ஜானி மாஸ்டர். மாஸ்டர், பீஸ்ட் படங்களின் ஸ்டெப்கள் ரசிகர்கள் செமயாக கவர்ந்தது. அதனால் தற்போது வாரிசு படத்திலும் ஸ்டெப்கள் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











