கோயிலுக்குள் செருப்பு...நயன்தாராவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் பிரபலம்

மும்பை : டைரக்டர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் பிரம்மாஸ்திரா. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, அனைவரின் பாராட்டையும் பெற்றது.

பாகுபலி படத்தையே மிஞ்சும் அளவிற்கு பிரம்மாஸ்திரா படத்தின் டிரைலர் அமைந்திருந்தது. அயன் முகர்ஜியின் வாழ்நாள் லட்சியமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 3 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

ப்ரீ ப்ரொடக்ஷன், ஷுட்டிங் என மொத்தம் 8 வருட உழைப்பாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாஸ்திரா படத்தின் ஷுட்டில்கிற்காக மட்டும் ஏறக்குறைய 5 வருடங்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 9 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாஸ்திரா டிரைலர்

பிரம்மாஸ்திரா டிரைலர்

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா, மெளனி ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் சிவா என்ற டைட்டிலில் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரன்பீர் சிங் நெருப்பின் சக்தியை ஆயுதமாகக் கொண்ட ஒருவராக டிரைலரிலேயே காட்டப்பட்டுள்ளார்.

சர்ச்சையான அந்த ஒரு சீன்

சர்ச்சையான அந்த ஒரு சீன்

பிரம்மாஸ்திரா படத்தின் டிரைலரில் ஒரே ஒரு காட்சியை தவிர மற்ற அனைத்தும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதாவது டிரைலரின் ஆரம்பத்தின் ஹீரோ இன்ட்ரோ சீனில் கோயிலுக்குள் ரன்பீர் சிங் ஓடி வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த சீனில் ரன்பீர் சிங் காலில் ஷு அணிந்த படி ஓடி வந்து, துள்ளி குதிப்பதாக காட்டப்பட்டிருக்கும். இந்த சீன் தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்து மதம் குறித்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இப்படி சீன் வைக்கப்பட்டுள்ளது கோயிலை அவமதிக்கும் செயல் என பலர் நெகடிவ் கமெண்ட்களை வழங்கி வருகின்றனர். தற்போது ரன்பீர் ஷு அணிந்து கோயிலுக்குள் வரும் க்ளிப்பிங் மட்டும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அச்சச்சோ...அப்படி ஏதும் இல்லை

அச்சச்சோ...அப்படி ஏதும் இல்லை

இந்த சீன் சர்ச்சையாக்கப்பட்டதை அடுத்து படத்தின் டைரக்டர் அயர் முகர்ஜி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், படத்தின் இயக்குனர் என்ற முறையில், என்ன நடந்தது என்பதை விளக்குகிறேன். ரன்பீர் கோயிலுக்கு செருப்பு அணிந்து வரவில்லை. அவர் வருவதாக காட்டப்பட்டுள்ள இடம் துர்கா பூஜா பந்தல் தான். இதே போன்ற ஒரு துர்க்கா பூஜையை எங்கள் குடும்பத்தில் 75 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். குழந்தையில் இருந்து இந்த பூஜையில் கலந்து கொண்டு வருகிறேன்.

விளக்கம் வந்த டைரக்டர்

விளக்கம் வந்த டைரக்டர்

என்னுடைய அனுபவத்தில், தேவியை எழுந்தருள செய்து பூஜை நடக்கும் சமயத்தில் மட்டும் தான் செருப்பை அணிவதில்லை. மற்ற நேரங்களில் பந்தலுக்குள் செல்லும் போது செருப்பு அணிந்து செல்வோம். ஆனால் இது யாருக்காவது தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும். ஏனேனில் யாருடைய மனமும் புண்படாத வகையில் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறேன்.

ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கனும்

ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கனும்

இந்திய கலாச்சாரம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றிற்கு மரியாதை கொடுத்து கொண்டாடுவதற்காகவே பிரம்மாஸ்திரா படத்தை எடுத்தேன். ஒவ்வொரு இந்தியனும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். அது எனக்கு மிக முக்கியமானது என்றார்.

நயன், சாரா வரிசையில் ரன்பீர்

நயன், சாரா வரிசையில் ரன்பீர்

சமீபத்தில் திருமணம் முடிந்ததும் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன், கோயில் முன்பு செருப்பு அணிய தடை விதிக்கப்பட்ட பகுதியில் செருப்பு அணிந்தபடி போட்டோஷுட் நடத்தியது சர்ச்சையாக்கப்பட்டது. பிறகு திருப்பதி தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பி பிரச்சனையை முடித்தார். இதற்கு முன் சாரா அலி கானும் ஒரு படத்தில் கோயிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற விவகாரம் சர்ச்சையானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X