»   »  இந்த படத்திலும் வரலாற்றை மாத்திட்டாங்க: கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

இந்த படத்திலும் வரலாற்றை மாத்திட்டாங்க: கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil
கங்கானாவிற்கும் கரண் ஜோஹார்க்கும் இடையில் உள்ள பிரச்சனை என்னதான் ?

மும்பை: கங்கனா ரனாவத் நடித்து வரும் மணிகர்னிகாவுக்கு ராஜஸ்தானில் எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருக்கிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா நடித்த பத்மாவதி படத்தில் ராணி பத்மினியை அவமதித்ததாக கூறி கர்னி சேனா அமைப்பு போராட்டத்தில் குதித்தது.

இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் படத்திற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது.

மணிகர்னிகா

மணிகர்னிகா

க்ரிஷ் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வரும் பாலிவுட் படம் மணிகர்னிகா. ஜான்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது.

பிரச்சனை

பிரச்சனை

ராணி லட்சுமியாக கங்கனா நடித்து வருகிறார். இந்நிலையில் படத்திற்கு ராஜஸ்தானை சேர்ந்த சர்வ பிராமண் மகாசபா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராணி

ராணி

மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமி பாய்க்கும், ஆங்கிலேயர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது போன்று காட்சி உள்ளதாக கேள்விப்பட்டோம். வெளிநாட்டவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் படம் எடுத்து ராணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திகிறார்கள் என்று சர்வ பிராமண் மகாசபா அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கடிதம்

கடிதம்

படம் குறித்து விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் கமல் ஜெயினுக்கு பல கடிதங்கள் அனுப்பினோம். ஆனால் அவர் பதில் அளிக்கவே இல்லை என்று சுரேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

விளக்கம்

விளக்கம்

மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமி பாயை மரியாதையான முறையில் காண்பித்துள்ளோம். படத்தில் எந்த காதல் காட்சியும் கிடையாது. வரலாற்றை நாங்கள் மாற்றவில்லை. படத்தில் ராணிக்கு எதிராக எதுவும் இல்லை என்கிறார் கமல் ஜெயின்.

English summary
After Padmaavat, Kanagana Ranaut's Manikarnika is facing issue from Rajasthan. Sarva Brahman Mahasabha from Rajasthan accuses the film crew of depicting Jhansi Rani Laxmi Bai in a bad light.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil