’ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து’...ரஜினியிடம் வந்துள்ள ப்ளூ சட்டை மாறன்..என்ன நோக்கம்?

சென்னை: சினிமாவில் வருவது போல உங்களுடைய சொத்துக்களை ஏழை மக்களுக்கு எழுதி கொடுத்து விடுங்கள் நிம்மதி கிடைக்கும் என ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் பற்றி போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

சினிமாக்களை யூடியூபில் விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன், தொடர்ந்து சினிமா பிரபலங்களுடன் சமூக வலைதளங்களில் சண்டை போடும் விதமாகவே ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் பக்கம் அவர் திரும்பியதை அறிந்த ரஜினி ரசிகர்கள் அவரை சோஷியல் மீடியாவில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கண்டுக்காத பார்த்திபன்

கண்டுக்காத பார்த்திபன்

நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் பஞ்சாயத்தை வைத்து கடந்த ஒரு வாரத்தை ஓட்டி விட்டார் ப்ளூ சட்டை மாறன். இரவின் நிழல் படத்தை கழுவி ஊற்றி விமர்சனம் செய்து, அதனை pinned ட்வீட்டாக வைத்து ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரை பார்க்க வைத்து விட்டார். ப்ளூ சட்டை மாறனின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் ட்வீட் போட்டு வந்த பார்த்திபனுக்கு பலரும் அவரை கண்டு கொள்ள வேண்டாம் என பதில் அளித்த நிலையில், அடுத்தடுத்து ப்ளூ சட்டை மாறன் போடும் ட்வீட்களை அவர் பொருட்படுத்தவில்லை. புதிய வீடியோ ஒன்றையும் அதற்காக போட்டு மீண்டும் வியூஸ்களை அள்ள ஆரம்பித்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

ரஜினிக்கு அட்வைஸ்

ரஜினிக்கு அட்வைஸ்

வாழ்க்கையில் தனக்கு 10 சதவீதம் கூட நிம்மதியில்லை என நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு டிரெண்டாகி வரும் நிலையில், தற்போது "உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு... இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி." என ரஜினி பக்கம் தனது நெகட்டிவ் ட்வீட்களை திருப்பி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

விளாசும் ரசிகர்கள்

விளாசும் ரசிகர்கள்

"அவருக்கு வாரிசுகள் இல்லை என்றால் கண்டிப்பாக அதை செய்து இருப்பார்.ஆனால் உன்னை போல் காட்டி கொடுத்து சம்பாதிக்க வில்லையே? அவருக்கு புத்திமதி சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று மனசாட்சியை கேட்டு பார்.ஒரு படத்தை நேர்மறை விமர்சனம் செய்ய பணம் கேட்கும் நீ ஒரு ????????" என்றும் மேலும், பல கெட்ட வார்த்தைகளால் திட்டியும் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வருகின்றனர்.

அடுத்து யாருகிட்ட அடி வாங்க போறாரோ

அடுத்து யாருகிட்ட அடி வாங்க போறாரோ

ஏற்கனவே தியேட்டரில் சில ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை அடித்து விட்டனர் என பஞ்சாயத்து சென்றது. இந்நிலையில், இப்போ ரஜினி பக்கம் திரும்பி இருக்கும் ப்ளூ சட்டை மாறனை வெளியே பார்த்தால் ரஜினி ரசிகர்கள் சும்மா விடுவார்களா? என்றும் அடுத்து யாரு கிட்ட அடி வாங்கப் போறானோ தெரியல என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து

நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து பாராட்டுக்களை பெற்ற நிலையில், பார்த்திபனுக்கு சப்போர்ட்டாக ரஜினிகாந்த் இரவின் நிழல் படத்தைத் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில், டைரக்டாக ரஜினி பற்றி நெகட்டிவ் ட்வீட்களை போட்டு பெரிய பஞ்சாயத்தை உருவாக்க நினைத்து விட்டாரா ப்ளூ சட்டை மாறன் என்றும், ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியா ரஜினி கிட்டேயே தனது வேலை காட்டுகிறாரோ பின் விளைவுகள் பெருசா இருக்குமே என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து எச்சரித்து வருகின்றனர்.

டிரெண்டிங் தான் மேட்டர்

டிரெண்டிங் தான் மேட்டர்

ப்ளூ சட்டை மாறன் எல்லோரையும் விமர்சிக்கவில்லை என்றும், யாரு டிரெண்டிங்கில் இருக்கிறாரோ, எந்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் அதிகம் பேசுகிறார்களோ, அதற்கு எதிர்மறையாக பேசினால் தான் வியூஸ் அதிகரிக்கும் என்கிற வியாபார யுக்தியை அறிந்து கொண்டு தான் செயல்படுகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பார்த்திபன் அதை புரிந்து கொள்ளாமல் பல பதில்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்ததில் தான் ப்ளூ சட்டை மாறனின் வலையில் சரியாக ஒரு வாரத்துக்கு சிக்கி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X