முதலில் ரஜினி, பிறகு விஜய்...இளம் டைரக்டரின் செம மாஸ் பிளான்

சென்னை : கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் ஹீரோவாக இருந்து வருகிறார் விஜய். இந்த ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் பல புதுமுக இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார். மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக புதுமுக இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தவர் விஜய் தானாம்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பிரபலமான, முன்னணி இயக்குனர்களின் டைரக்ஷனிலேயே விஜய் நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென தனது முடிவை மாற்றி, இளம் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார்.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக தான் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

தெலுங்கு படத்தில் விஜய்யா

தெலுங்கு படத்தில் விஜய்யா

பீஸ்ட் படத்தை தொடர்ந்து பான் இந்தியன் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தை வம்ஷி பைடபள்ளி இயக்க போவதாகவும், தில் ராஜு இந்த படத்தை இயக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தளபதி 66 ஆ அல்லது தளபதி 67 ஆ என்பது தெரியவில்லை. இந்த படத்தின் மூலம் விஜய் தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விஜய்யா

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விஜய்யா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, இளம் டைரக்டர் தேசிங்கு பெரியசாமி கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாம். இந்த படத்தில் நடிக்க விஜய் ஓகே சொல்லி விட்டதால் இந்த படம் கிட்டதட்ட முடிவாகி விட்டதாம்.

அடுத்த படம் எப்படியிருக்கும்

அடுத்த படம் எப்படியிருக்கும்

தேசிங்கு பெரியசாமி, 2019 ல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி, டைரக்டராக கோலிவுட்டில் அறிமுகமானவர். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய அளவில் வசூலை பெறாவிட்டாலும், ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றது. இதனால் இவர் அடுத்து இயக்க போகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தலைவர் 169 படத்தை இயக்க போகிறாரா

தலைவர் 169 படத்தை இயக்க போகிறாரா

ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை இயக்க போவதாக சமீபத்தில் கூறப்பட்டது. முதலில் அது போன்ற எந்த பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என கூறிய தேசிங்கு பெரியசாமி, பிறகு ட்விட்டரில் ரசிகர் ஒருவர், தலைவர் 169 ஐ இயக்க போறீங்களா என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நிச்சயம் நடக்கும் என்றார்.

தலைவர் 169 எப்போ

தலைவர் 169 எப்போ

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ள இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தின் வேலைகள் ஏற்கனவே முடிந்து விட்டதால், தலைவர் 169 படத்தின் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகி, படத்தின் வேலைகள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை தொடர்ந்து விஜய்

ரஜினியை தொடர்ந்து விஜய்

இந்நிலையில் மற்றொரு தகவலாக, ரஜினி நடிக்கும் தலைவர் 169 படத்தை முடித்த பிறகு, விஜய் நடிக்கும் புதிய படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க போகிறாராம். தலைவர் 169 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க போவது உறுதியாகாவிட்டால், தேசிங்கு பெரியசாமி தனது மூன்றாவது படமாக விஜய் படத்தை இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X