நேற்று சமந்தா.. இன்று மஞ்சு வாரியர்.. டப்பிங்கில் பிசியான ஹீரோயின்கள்.. துணிவு மாஸ் அப்டேட்!
சென்னை: போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்து வரும் துணிவு படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
வாரிசு படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நிறைவுற்ற நிலையில், நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அஜித்தின் துணிவு
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் ஆரம்பித்த பயணம் வலிமை, துணிவு என ஹாட்ரிக் அடித்துள்ளது. துணிவு டைட்டிலுக்கு ஏற்றவாறு No Guts No Glory எனும் சப் டைட்டிலும், விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக இந்த முறை துணிவுடன் அஜித் களமிறங்க காத்திருக்கிறார்.

சூட்டிங் நிறைவு
கடைசியாக துணிவு படத்தின் சூட்டிங் சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்றது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் மாலத்தீவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதன் பிறகு கடைசியாக சென்னை மவுண்ட் ரோடில் துணிவு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கவில்லை என்றும் அது பேட்ச் வொர்க் என்றும் தகவல்கள் வெளியாகின.

மஞ்சு வாரியர் ரோல் என்ன
வலிமை படத்தில் ஹூமா குரேஷி ஜோடி போல வந்து டூயட் எல்லாம் பாடாமல் ஹீரோயினாக வந்து ஆக்ஷனில் தெறிக்கவிட்டு இருந்தார். துணிவு படத்திலும் மஞ்சு வாரியருக்கு பவரான ரோல் என்பதால் தான் அவரை ஆன்போர்டு செய்துள்ளனர். வங்கியை கொள்ளையடிக்கும் நபராக அஜித் வரும் நிலையில், அவரை கண்டு பிடிக்கும் காவல் அதிகாரியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார் என்றும் ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு என தகவல்கள் கசிந்துள்ளன.

துணிவு டப்பிங்
சூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வங்கியையே பிளாஸ்ட் செய்யும் சிஜி காட்சிகள் எல்லாம் அதிகம் இந்த படத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், துணிவு படத்தின் டப்பிங் பணியை மேற்கொண்டு வரும் மஞ்சு வாரியர் டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து ஒரு போட்டோவை போட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

நேற்று சமந்தா
மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நடிகை சமந்தா கையில் ஸ்ட்ரிப்ஸ் ஏற்றியவாறே யசோதா படத்திற்கான டப்பிங் பணிகளில் பங்கேற்றுள்ள புகைப்படத்தை நேற்று பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். இந்நிலையில், இன்று மஞ்சு வாரியரின் டப்பிங் போட்டோ வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











