»   »  பாகுபலி 2: இது என்னய்யா ராஜமவுலிக்கு அடுத்தடுத்து சோதனை?

பாகுபலி 2: இது என்னய்யா ராஜமவுலிக்கு அடுத்தடுத்து சோதனை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படத்தின ட்ரெய்லர் இணையதளத்தில் லீக்காகவே வேறு வழியில்லாமல் படக்குழு அறிவித்ததற்கு முன்பே ட்ரியெலரை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பு ட்ரெய்லர் மட்டும் இணையதளத்தில் கசிந்துவிட்டது. அந்த ட்ரெய்லர் கசிந்த வேகத்தில் அதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர் செய்தனர்.

படக்குழு

படக்குழு

பாகுபலி 2 ட்ரெய்லர் கசிந்த விஷயம் அறிந்த படக்குழுவினர் வேறு வழியில்லாமல் அதை அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியிட்டனர். அனைத்து மொழி பதிப்புகளின் ட்ரெய்லர்களும் முன்கூட்டியே வெளியிடப்பட்டது.

காட்சிகள்

காட்சிகள்

முன்னதாக கிராபிக்ஸ் பணி நடந்தபோது பாகுபலி 2 படத்தின் சில காட்சிகள் கசிந்தன. உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்து கிராபிக்ஸ் டிசைனர் கைது செய்யப்பட்டார்.

மீண்டும்

மீண்டும்

காட்சிகள் கசிந்த நிலையில் தற்போது ட்ரெய்லரும் கசிந்துள்ளது. இதுவும் படக்குழுவில் உள்ளவர்களின் வேலையா இல்லையா என்பது தெரியவில்லை.

English summary
After some scenes, Baahubali 2 trailer got leaked in the net. So the team was forced to release the trailer before the announced time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil