பஞ்சாப் பாடகரை தொடர்ந்து அமெரிக்க ராப் பாடகரும் சுட்டுக்கொலை

ஜார்ஜியா : இந்தியாவில் பஞ்சாப் பாடகர் சித்து மோசிவாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே அமெரிக்காவில் ராப் பாடகர் ஒருவரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் Mariel Semonte Orr என்ற 34 வயதாகும் ராப் பாடகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆனாலும் Trouble என்ற பெயராலேயே இவர் பிரபலமானார். அதிகாலை 3.20 மணியளவில் Lake St.James அப்பார்ட்மென்ட்ஸ் பகுதியில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

After Sidhu Moosewala, American rapper Trouble shot dead

Mariel கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக Jamichael Jones என்பவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. Mariel ஐ சந்திக்க அவரது பெண் நண்பர் ஒருவர் வந்து சென்ற பிறகு தான் தகராறு நடைபெற்றுள்ளது. இந்த தகராறில் தான் Mariel சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தகராறுக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. அதே சமயம் Mariel ன் திடீர் மறைவிற்கு ஏராளமானோர் இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2011 ம் ஆண்டு mixtape ஆல்பம் வெளியிட்டு இசை உலகிற்கு அறிமுகமானார் Trouble. பிறகு 2018 ம் ஆண்டு Edgewood என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ராப் பாடகர்கள், பாப் இசைப் பாடகர்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவது ஒட்டுமொத்த இசை உலகையே கலங்க வைத்துள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மோசிவாலாவின் கொலை, பாடகர் கேகே.,வின் மர்ம மரணம் ஆகியன இந்திய இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், Trouble ன் கொலை அமெரிக்க ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X