»   »  சிவகார்த்திகேயனை அடுத்து விழா மேடையில் அழுத நடிகை பூர்ணா

சிவகார்த்திகேயனை அடுத்து விழா மேடையில் அழுத நடிகை பூர்ணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவரக்கத்தி இசை வெளியீட்டு விழாவில் நடிகை பூர்ணா மகிழ்ச்சியில் அழுதுள்ளார்.

ஆதித்யா இயக்கத்தில் இயக்குனர் ராம், பூர்ணா, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சவரக்கத்தி. படத்தை மிஷ்கின் தயாரித்துள்ளார். பூர்ணா நாயகியாக நடித்துள்ளார். கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த பூர்ணா ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சவரக்கத்தி படத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பூர்ணா கூறுகையில்,


டான்ஸர்

டான்ஸர்

டான்ஸராக இருந்த நான் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் பரத்துக்கு ஜோடியானேன். அந்த படத்தை பார்த்தவர்கள் என் நடிப்பை பாராட்டினார்கள்.


பட வாய்ப்பு

பட வாய்ப்பு

பரத் படத்தை அடுத்து தொடர்ந்து நடித்தேன். ஆனால் அண்மை காலமாக எனக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் சும்மா இருந்து என்ன செய்ய என தோன்றியது.


மீண்டும்

மீண்டும்

நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் சும்மா இருப்பதற்கு பதிலாக மீண்டும் டான்ஸராகிவிட்டால் என்ன என்று நினைத்தேன். அந்த நேரத்தில் தான் மிஷ்கின் என்னை நம்பி நல்ல கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்.


அழுகை

அழுகை

ரொம்ப நாள் கழித்து என்னை பெரிய திரையில் பார்த்த என் அம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது என்று கூறிய பூர்ணா மகிழ்ச்சியில் மேடையில் அழுதுவிட்டார்.


சிவா

சிவா

ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி அழுத நிலையில் பூர்ணா மகிழ்ச்சியில் மேடையில் அழுதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
After Sivakarthikeyan, actress Poorna cried on stage during the audio launch of her upcoming movie Savarakathi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil