»   »  சிவாஜியின் ‘கலையுலக’ வாரிசான கமல் ‘செவாலியே’வையும் மிச்சம் வைக்கவில்லை!

சிவாஜியின் ‘கலையுலக’ வாரிசான கமல் ‘செவாலியே’வையும் மிச்சம் வைக்கவில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசனின் கலையுலக வாரிசாக நடிகர் கமல்ஹாசன் கருதப் படுகிறார்.

காரணம் சிவாஜியைப் போலவே கமலும் வித்தியாசமான வேடங்களில் ஆர்வமாக நடித்து வருவது தான்.

After Sivaji Kamal honored with Chevalier award

அந்தவகையில் விருது பெறுவதிலும் சிவாஜியின் கலையுலக வாரிசாகவே சிறந்த நடிப்பாற்றலுக்காக செவாலியேவைப் பெற்றுள்ளார் கமல்.

தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட நினைப்பதில் சிவாஜியைப் போலவே கமலும் வித்தகர். நடிப்பிற்காக தனது உருவத்தை எப்படியும் மாற்றிக் கொள்ள இருவருமே தயங்காதவர்கள்.

நவராத்திரி படத்தில் ஒன்பது வேடத்தில் நடித்து வித்தியாசமான முயற்சியில் வெற்றி பெற்றார் சிவாஜி. ஆனால், அவரையும் விட கூடுதலாக ஒரு வேடத்தில், அதாவது பத்து வேடத்தில் தனது தசாவதாரம் படத்தில் நடித்தார் கமல்.

கடந்த 1997ம் ஆண்டு சிவாஜிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலும் அந்த விருதைப் பெற்றுள்ளார்.

இது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Actor Kamal Hassan is the only person honored with the prestigious chevalier award by France government after veteran actor Sivaji.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil