இளம் ஹீரோக்களுடன் கைகோர்க்கும் கமல்...இந்த லிஸ்டில் அடுத்து யாரு?

சென்னை : விக்ரம் படத்தின் மாஸ் வெற்றிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகி விட்டார் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திற்கு பிறகு, டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அவரே கூறி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, அடுத்த படத்திற்கு தயாராவதற்காக கமல் விரைவில் அமெரிக்கா புறப்பட போகிறார் என சொல்லப்படுகிறது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்பதால் அதை முடிக்க கமல் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்தின் வயதான கெட்அப்பிற்கான மேக் அப் பொருந்தவில்லை என்று தான் முதலில் படத்தின் தாமதத்திற்கு முதலில் சொல்லப்பட்ட காரணம். தற்போது அந்த பிரச்சனை மீண்டும் வரக்கூடாது என்பதால் ஹாலிவுட் டாப் மேக்அப் கலைஞர்களுடன் பேச தான் கமல் அமெரிக்க செல்லப் போகிறார் என சொல்லப்படுகிறது.

கமல் நடிக்க போகும் அடுத்த படம்

கமல் நடிக்க போகும் அடுத்த படம்

3 வாரங்கள் அமெரிக்காவில் தங்கிய பிறகு கமல் இந்தியா திரும்ப உள்ளதாகவும், செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், விவேக், நெடுமுடி வேணு ஆகியோருக்கு பதில் நடிக்க உள்ளவர்கள் பற்றி முடிவு செய்து, அறிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு


கமல் நடிப்பில் மட்டுமல்ல, தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வருகிறார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் துவங்கப்பட்டதும் தயாரித்த முதல் படம் கமலின் ராஜபார்வை தான். பல தெலுங்கு, இந்தி படங்களையும் தயாரித்துள்ளது. தமிழில் கமல் நடித்த படங்களை மட்டுமே தயாரித்துள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ், கமல் அல்லாத ஹீரோ ஒருவரின் படத்தை தயாித்தது என்றால் அது விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் தான். இந்த படத்திலும் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இளம் ஹீரோக்களுடன் கூட்டணி

இளம் ஹீரோக்களுடன் கூட்டணி

ஆனால் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இளம் ஹீரோக்கள் பலரின் படங்களை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க போவதாக கமல் அறிவித்து வருகிறார். முதலில் சிவகார்த்திகேயன், பிறகு உதயநிதி நடிக்க உள்ள படங்களை தயாரிக்க போவதாக அறிவித்த கமல், விக்ரம் பிரஸ்மீட்டில் விஜய் ஓகே சொன்னால் அவருடைய ஒரு படத்தை தயாரிக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அடுத்தது யாரு தெரியுமா

அடுத்தது யாரு தெரியுமா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக கமல் தற்போது சிம்பு தயாரிக்கும் படம் ஒன்றை தயாரிக்க போவதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அனைத்தும் சரியாக சென்றால் சிம்பு நடிக்க உள்ள படம் ஒன்றையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தினால் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா போன்ற இளைஞர் பட்டாளத்துடன் கமல் கை கோர்த்திருந்தார்.

 அடுத்தடுத்து கலக்குறாரே கமல்

அடுத்தடுத்து கலக்குறாரே கமல்

தற்போது இளம் ஹீரோக்களுடன் கைகோர்த்து வருகிறார். இதற்கிடையில் கமல் அடுத்து நடிக்க உள்ள தேவர்மகன் 2 படத்தில் நடிக்க விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்டோரிடமும் பேசப்பட்டு வருவதாக மற்றொரு தகவலும் சமீபத்தில் வெளியாகி, பரபரப்பாக பேசப்பட்டது.நடிப்புடன் சேர்த்து, தயாரிப்பிலும் கமல் விஸ்வரூபம் எடுத்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X