»   »  நிகழ்ச்சியா நடத்துறாங்க: முதலில் ஸ்ரீப்ரியா, தற்போது ரஞ்சனி, அடுத்தது யாரோ?

நிகழ்ச்சியா நடத்துறாங்க: முதலில் ஸ்ரீப்ரியா, தற்போது ரஞ்சனி, அடுத்தது யாரோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சேனல்களில் நடிகைகள் நடத்தி வரும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு சக நடிகைகளிடம் இருந்தே எதிர்ப்பு வலுத்து வருகிறது.

டிவி சேனல்களில் சீனியர் நடிகைகள் தம்பதிகளிடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தமிழில் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், தெலுங்கில் கீதா, மலையாளத்தில் ஊர்வசி ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட சர்ச்சையால் ஊர்வசிக்கு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா

தம்பதிகளிடையேயான பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்த நடிகைகள் யார் என சீனியர் நடிகையான ஸ்ரீப்ரியா ட்விட்டர் மூலம் குரல் எழுப்பினார். அவரின் கருத்தை நடிகை ராதிகா சரத்குமார் ஆமோதித்தார்.

ரஞ்சனி

ரஞ்சனி

ஸ்ரீப்ரியாவை அடுத்து பிரபல நடிகை ரஞ்சனியும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகளுக்கு அதற்கான தகுதி இல்லை என்று ஃபேஸ்புக்கில் காட்டமாக போஸ்ட் போட்டுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஸ்ரீப்ரியா, ரஞ்சனியின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள் நாங்கள் நினைத்தோம், நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இது போன்ற நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குஷ்பு

குஷ்பு

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தம்பதிகளின் பிரச்சனைகளை தாங்கள் தீர்த்து வைப்பதாகவும், அவர்களின் உறவை பலப்படுத்துவதாகவும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

English summary
After Sripriya, actress Ranjini too raised her voice against TV programmes hosted by actresses to solve couple's marital issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil