செம பேச்சு...அபிஷேக்கின் பழைய வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது. இரண்டாவது வாரத்தில் நாடியா சாங்கை தொடர்ந்து, மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜா எவிக்ட் ஆகி வெளியேற்றப்பட்டுள்ளார்.
அபிஷேக், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நெட்டிசன்கள் பலர் அவரை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தனர். அபிஷேக் Haters பலரும் அவரை கழுவி ஊற்றி, மீம்கள் உருவாக்கி இருந்தனர்.

விமர்சிக்கப்பட்ட அபிஷேக்
புகழ்பெற்ற யூட்யூப்பரான அபிஷேக் ராஜா, சினிமா விமர்சகராகவும், விஜே.,வாகவும் புகழ்பெற்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே ஏராளமான Haters கொண்டவர் அபிஷேக். சர்ச்சையான பேச்சுக்கள், இன்ஃப்ளுயன்ஸ் செய்யும் வகையிலான பேச்சுக்களால் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.

வைரலான பழைய வீடியோ
அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கமல் பற்றியும் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு, வைரலாக்கப்பட்டது. இந்நிலையில் அபிஷேக் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பகிர்ந்து, வைரலாக்கி உள்ளனர்.

மீண்டும் வைரலான வீடியோ
பழைய வீடியோவாக இருந்தாலும் இதில் அபிஷேக் பேசிய பேச்சுக்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக உள்ளது என பலர் போஸ்ட் செய்துள்ளனர். அந்த வீடியோவில் அவர், எனக்கு எதிரான விமர்சனங்களில் இருந்து என்னை நான் காத்து கொள்ள விரும்பவில்லை. பலர் எனக்கு எதிராக பல விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். ஆனால் ஒரு தனி மனிதனாக , அதை ஏற்றுக் கொண்டு, சில சிறப்பான செயல்களை செய்ய நினைக்கிறேன்.

விமர்சனத்தை ஏற்கிறேன்
நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என எனக்கு தெரியும். சிலவற்றை சாதிக்க வேண்டும். என்னை விமர்சிப்பதை நான் தடுக்க நினைப்பது அதற்கு ஏற்றுக் கொள்வதை போல் ஆகி விடும். அதனால் அந்த விமர்சனங்களில் இருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள நான் நினைக்கிறேன். தொடர்ந்து அதை செய்யவே நினைக்கிறேன்.

சுவாரஸ்யங்களை வரவேற்கிறேன்
மக்கள் என் மீது எவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் சுவாரஸ்யத்தை வளர்த்துக் கொண்டுள்ளேன். எதிர்மறையான விஷயங்களை ஒதுக்கிவிட்டு போவதாலேயே சினிமா நட்சத்திரங்களுக்காக என்னால் வேலை செய்ய முடிகிறது. இந்த நிலையில்லாத விஷயங்களை வாழ்க்கையில் நான் எப்போது விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

என்னை தடுக்க முடியாது
இது போன்ற சவால்களை நான் விரும்புகிறேன். உங்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. என்னை நேசிக்கும், என்னை வெறுக்கும் அனைவருக்கும் எனது நன்றி. நல்ல விஷயங்கள் நடைபெற போவதை எண்ணி நம்பிக்கையுடன் சிறப்பாக பணியாற்றுங்கள். எனக்கு பிடித்ததை செய்வதை யாராலும், எதாலும் என்னை தடுக்க முடியாது. ஒரு சுவாரஸ்யமான தளம் எனக்கு கிடைத்துள்ளது. நான் எப்போதும் ரசிகர்களுக்கு உண்மையாக இருப்பேன் என்றும் பேசி உள்ளார் அபிஷேக்.


Click it and Unblock the Notifications











