»   »  அமெரிக்கா போய் வந்தபின் 'முழுநேர' அரசியல்வாதியாகிறார் ரஜினி!

அமெரிக்கா போய் வந்தபின் 'முழுநேர' அரசியல்வாதியாகிறார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
முதலில் அமெரிக்கா பயணம் அடுத்து முழுநேர அரசியல்வாதி - ரஜினி- வீடியோ

சென்னை: ஆன்மீகப் பயணத்தை முடித்த கையோடு, ஒரு வாரம் அமெரிக்காவுக்குப் பயணமாவார் என்றும், அமெரிக்கப் பயணம் முடிந்து வந்த பிறகு அவர் தனது அரசியல் திட்டங்களை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி தனது அரசியல் பயணத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இடையில் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு 15 நாட்கள் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றிருக்கிறார்.

After US trip Rajini to turn full time politician

இது வெறும் ஆன்மிக பயணம் மட்டுமே, அரசியல் பயணம் எதுவுமில்லை எனவும், இமயமலைக்கு சென்று நீண்ட நாட்களானதால் செல்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தான் இன்னும் முழுமையான அரசியல்வாதியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இப்பயணத்தை முடித்த கையோடு தனது வழக்கமான உடல்நல சோதனைக்காக அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார் ரஜினி. அங்கு ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நாட்களில் மாவட்ட நிர்வாகிகளின் தேர்வை முடிக்க நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளது.

அதற்கு பின்தான் தனது அரசியல் அதிரடி திட்டங்களை ஒவ்வொன்றாக வெளியில் விடத்திட்டமிட்டுள்ளாராம் ரஜினி.

English summary
Sources say that Rajinikanth would be turned as full time politician after his proposed US trip

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil