வடிவேலு எப்படி இருக்கிறார்... டைரக்டர், தயாரிப்பாளருக்கும் கொரோனாவா...அப்டேட் தந்த அமைச்சர்
சென்னை : நடிகர் வைகைபுயல் வடிவேலுவுடன் ஷுட்டிங்கிற்காக வெளிநாடு சென்று திரும்பிய டைரக்டர், தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலத்திற்கு பிறகு நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் வைகைபுயல் வடிவேலு. இந்த படத்தின் ஷுட்டிங் லண்டனில் நடைபெற்றது. இதற்காக வடிவேலு, டைரக்டர் சுராஜ், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் லண்டன் சென்றிருந்தனர். லண்டனில் அவர்கள் குழுவாக எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்று சமீபத்தில் வெளியானது.

வடிவேலு மருத்துவமனையில் அனுமதி
சமீபத்தில் நாடு திரும்பிய வடிவேலுவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை - போரூர் ராச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் பிரார்த்தனை
வடிவேலு விரைவில் குணமடைய பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சோஷியல் மீடியா மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வடிவேலு நலமாக உள்ளார்
இந்நிலையில் வடிவேலுவின் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று பேட்டி அளித்தார். அதில் அவர், நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் பரிசோதனை செய்ததில் இயக்குநர், தயாரிப்பாளருக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

டைரக்டர், தயாரிப்பாளருக்கும் கொரோனா
வடிவேலுவிற்கு ஒமைக்ரான் முதல் நிலை அறிகுறி S DROP அறிகுறி இருக்கும் என்ற சந்தேகம் காரணமாக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். இயக்குனர் சுராஜ், தயாரிப்பாளர்களில் ஒருவரான தமிழ் குமரன் ஆகியோருக்கு பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எஸ்ஜின் டிராப் இருவருக்கும் உள்ளது.
Recommended Video

விளக்கம் தந்த அமைச்சர்
சுராஜிற்கு முதலில் நெகடிவ் என வந்தது. ஆனால் அவருக்கு சளி இருப்பதாக சொன்ன நிலையில் திருவள்ளூர் டிடியிடம் சொல்லி பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று பேரும் நன்றாக உள்ளனர். டைரக்டர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் குமரனுக்கு ஒமைக்ரான் ஆரம்ப அறிகுறி உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











