twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலிமையை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிராகவும் போலீசில் புகார்...எதுக்கு தெரியுமா?

    |

    சென்னை : அஜித் நடித்த வலிமை படத்தை தொடர்ந்து, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிராகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்டார்களின் படங்களுக்கு எதிராக அடுத்தடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் பல தடைகள், எதிர்ப்புகளை தாண்டி மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் பாண்டிராஜ் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடம், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

    Etharkkum Thunindhavan Box Office Collection Day 2: எதற்கும் துணிந்தவன் 2வது நாள் வசூல் எவ்வளவு?Etharkkum Thunindhavan Box Office Collection Day 2: எதற்கும் துணிந்தவன் 2வது நாள் வசூல் எவ்வளவு?

    எதிர்ப்பை சந்தித்த எதற்கும் துணிந்தவன்

    எதிர்ப்பை சந்தித்த எதற்கும் துணிந்தவன்

    எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாவதற்கு முன்பே ஜெய்பீம் விவகாரம் மீண்டும் தலைதூக்கி, பிரச்சனை எழுந்தது. இதனால் சூர்யாவின் வீடு, எதற்கும் துணிந்தவன் திரையிடப்பட்ட தியேட்டர் என பலவற்றிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த பிரச்சனை ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்கையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது. எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாவதற்கு முன்பே ஜெய்பீம் விவகாரம் மீண்டும் தலைதூக்கி, பிரச்சனை எழுந்தது. இதனால் சூர்யாவின் வீடு, எதற்கும் துணிந்தவன் திரையிடப்பட்ட தியேட்டர் என பலவற்றிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த பிரச்சனை ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்கையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது.

    எதற்கு போலீஸ் புகார்

    எதற்கு போலீஸ் புகார்

    எதற்கும் துணிந்தவன் படக்குழுவிற்கு எதிராக அனைத்திந்திய நேதாஜி கட்சி சார்பில் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், படத்தில் வரும் உள்ளம் உருகுதய்யா பாடல் தமிழ் கடவுளான முருகப் பெருமானை அவமதிக்கும் விதமாக உள்ளது. அதனால் அந்த பாடலை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    படக்குழுவிற்கு வந்த சிக்கல்

    படக்குழுவிற்கு வந்த சிக்கல்

    இது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி கூறுகையில், இந்த பாடல் பல வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படத்தில் பாடலில் மட்டுமின்றி பல காட்சிகளிலும் முருகப் பெருமானை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த பாடலை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அதோடு நடிகர் சூர்யா, டைரக்டர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி அது பக்தி பாடல் என தெரிந்தும் அதை தவறாக பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி கூறுகையில், இந்த பாடல் பல வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படத்தில் பாடலில் மட்டுமின்றி பல காட்சிகளிலும் முருகப் பெருமானை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த பாடலை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அதோடு நடிகர் சூர்யா, டைரக்டர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி அது பக்தி பாடல் என தெரிந்தும் அதை தவறாக பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    கோர்ட் வரை போன வலிமை

    கோர்ட் வரை போன வலிமை

    சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படத்திலும் வழக்கறிஞர்களை தவறாக சித்தரிப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். வழக்கறிஞர் சங்கம் சார்பிலும் போலீஸ் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வலிமை படத்தின் டைரக்டர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    English summary
    After Valimai, now police complaint filed against Suriya's Etharkkum thunindhavan. The song Ullam Urugidhaiya song is insult of lord Muruga. so all india nethaji party demand to remove the song from the movie and take legal action against movie team including suriya, director pandiraj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X