Don't Miss!
- News
எனது மாப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார்! மருமகன் பற்றி மனம் திறந்த மாமியார் ஜோதி!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Technology
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வீரசிம்மா ரெட்டி ட்ரெய்லர் பவர்.. தெலுங்கில் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியே மாறுதா? என்ன ஆச்சு?
சென்னை: பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி உள்ள வீரசிம்மா ரெட்டி படத்தின் அதிரடியான ட்ரெய்லர் ஜனவரி 6ம் தேதி இரவு வெளியானது. அகண்டா படத்தை போலவே இந்த படமும் ஃபயருக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் சமீபத்தில் வெளியான வாரிசு மற்றும் துணிவு ட்ரெய்லர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு உள்ளதாக தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், வாரிசு படம் வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள நிலையில் வாரசுடு படம் ஒரு வாரம் தள்ளி ரிலீஸாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பொங்கலுக்கு பல கட்ட போட்டிகளை நடிகர் விஜய் எதிர்கொண்டு தனது ஸ்டார்டம்மை நிலை நாட்ட வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என திரைத்துறையில் பெரும் பேச்சு நிலவி வருகிறது.
வெளியானது சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !

பறக்கவிடும் பாலய்யா
நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள வீரசிம்மா ரெட்டி படம் வரும் சங்கராந்தியை டார்கெட் செய்து டோலிவுட்டில் வெளியாகிறது. பாலய்யா என ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் அகண்டா படமே மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், வீரசிம்மா ரெட்டியின் ட்ரெய்லரும் படம் தீயாக தெறிக்கும் என்பதை உணர்த்துகிறது. வில்லியாக வரலக்ஷ்மி சரத்குமார் தன் பங்குக்கு மிரட்டி உள்ளார்.

சிக்கலில் வாரிசு
தமிழில் நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு படம் வெளியாகிறது. காலை 4 மணிக்குத்தான் வாரிசு படத்தின் முதல் ஷோ வெளியாகிறது. துணிவு படம் ஆக்ஷன் படம் என்பதால் நள்ளிரவிலும் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வாரிசு படம் குடும்ப சென்டிமென்ட் அதிகம் நிறைந்துள்ளதால் நள்ளிரவு படத்தை போட்டால் பாதி பேர் தூங்கிவிடுவார்களோ என்கிற சந்தேகத்தால் அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ போடுவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

விஜய்க்கு மும்முனை தாக்குதல்
தமிழில் நடிகர் அஜித்தின் துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக வெளியாக உள்ள நிலையில், தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படமும் இந்த பொங்கலுக்கு வெளியாகிறது. 3 முன்னணி நடிகர்களுடன் நடிகர் விஜய் இந்த பொங்கலுக்கு போட்டிப் போட உள்ளார்.

பின் வாங்குமா வாரசுடு
வால்டர் வீரய்யா படத்தை விட வீரசிம்மா ரெட்டி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், தெலுங்கில் வாரசுடு படத்தை ஒரு வாரம் கழித்து வெளியிடலாமா? என தயாரிப்பாளர் தில் ராஜு முடிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்லது திட்டமிட்ட தேதியிலேயே பின் வாங்காமல் வருகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Cumulative வசூல்
வாரிசு மற்றும் வாரசுடு குறிப்பிட்ட ஜனவரி 11ம் தேதியே வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் சொல்லும் போது Cumulative வசூல் என சேர்த்து சொல்ல வசதியாக இருக்குமே என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன. இந்த பொங்கல் போட்டி எத்தனை பஞ்சாயத்துகளை கூட்ட காத்திருக்கிறதோ தெரியவில்லை.