»   »  "புலி"யைத் தொடர்ந்து ஹிந்தி பேசவிருக்கும் "தல 56"

"புலி"யைத் தொடர்ந்து ஹிந்தி பேசவிருக்கும் "தல 56"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புலி திரைப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் தல 56 திரைப்படமும் ஹிந்தியில் டப் செய்யப்படவுள்ளது.

பாகுபலி ஏற்படுத்திய தாக்கத்தால் ஹிந்தியில் குறிப்பாக பாலிவுட்டில் தென்னிந்தியப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பாகுபலியைத் தொடர்ந்து விஜயின் நடிப்பில் வெளியாகவிருக்கும் புலி திரைப்படம் ஹிந்தியில் வெளியாகவிருக்கிறது.

பாகுபலி மற்றும் புலி திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது அஜீத்தின் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் தல56 திரைப்படமும் ஹிந்தி பேசவிருக்கிறது.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி திரைப்படம் பாலிவுட்டில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அதிகம். ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியான இத்திரைப்படம் பாலிவுட் பாக்ஸ் ஆபிசை ஆட்டிப் படைத்தது. பாகுபலியின் ஆட்டத்தைக் கண்டு முன்னணி பாலிவுட் நடிகர்களே தங்கள் படங்களை வெளியிடத் தயங்கி நின்றனர்.

புலி

புலி

பாகுபலியின் அசத்தலான வெற்றியால் விஜய் நடிப்பில் பேண்டசி திரைப்படமாக உருவாகியிருக்கும் புலி திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

தல 56

தல 56

பாகுபலி மற்றும் புலி திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது அஜீத்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் தல 56 திரைப்படமும் ஹிந்தி மொழியில் வெளியாகவிருக்கிறது.

குறைந்த திரையரங்குகளில்

குறைந்த திரையரங்குகளில்

தல 56 திரைப்படத்தை ஹிந்தி மொழியில் டப் செய்து வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் தற்போது இறங்கியிருக்கின்றனர். இதுவரை படத்தின் ஹிந்தி உரிமை விநியோகம் ஆகவில்லை எனினும் முன்னணி நிறுவனம் ஒன்றிற்கு படத்தை விற்க படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தை குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டு லாபம் பார்த்தால் போதும் என்ற முடிவில் தல56 படத்தின் ஹிந்தி உரிமையை விலைபேசி வருகின்றனர். விரைவில் தல56 ஹிந்தி உரிமை பற்றி முறையான அறிவிப்புகள் வெளியாகலாம்.

    English summary
    Now, the market for South Indian films in Bollywood has increased. SS Rajamouli's "Baahubali" simultaneously released its dubbed versions along with the original version in theatres and it received positive response. Following the footsteps of "Baahubali", Ilayathalapathy Vijay's forthcoming movie "Puli" is also getting ready to release in Bollywood simultaneously with Tamil and Telugu versions. The latest edition to the list is Ajith's forthcoming movie, which is curently being called "Thala 56".

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil