டிவி.,க்கு வரும் அடுத்த மாஸ் ஹீரோ...அசத்தலாக வெளியான ப்ரோமோ
மும்பை : சினிமாவில் உச்சத்தில் இருக்கும் டாப் நடிகர், நடிகைகள் பலர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தொடர்ந்து வருகிறது. இவர்கள் தொகுத்து வழங்குவதாலேயே பல நிகழ்ச்சிகள் பாப்புலர் ஆகி உள்ளன.
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால், சமந்தா, நாகர்ஜுனா, சூர்யா, அரவிந்த்சாமி, குஷ்பு, ராதிகா, ரம்யா கிருஷ்ணன் என பலரும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வந்து விட்டனர்.

தமிழில் மாஸ்டர் செஃப்
இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ளது விஜய் சேதுபதியும், தமன்னாவும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்க உள்ளார் விஜய் சேதுபதி.

தெலுங்கில் தமன்னா
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பு ஜெமினி டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். சமீபத்தில் இதன் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகின.
டிவி.,க்கு வந்த மாஸ் ஹீரோ
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக பாலிவுட் முன்னணி ஹீரோ ரன்வீர் சிங்கும் டிவிக்கு வந்துள்ளார். விரைவில் கலர்ஸ் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ள "தி பிக் பிக்சர்" (The Big Picture) என்ற ரியாலிட்டி ஷோவை தான் ரன்வீர் தொகுத்து வழங்க உள்ளார். இதன் ப்ரோமோ நேற்று வெளியிடப்பட்டது.

டிஆர்பி எகிற போகுது
ஏற்கனவே பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மிக பிரபலமாகி உள்ளன. இதனால் அந்நிகழ்ச்சிகளின் டிஆர்பி எங்கேயோ சென்று விட்டது. அந்த வரிசையில் ரன்வீர் சிங் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியும் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











