லாரன்சை வச்சு வெற்றிப்படத்தின் 2வது பாகத்தை இயக்கறாரு கார்த்திக் சுப்புராஜ்... விரைவில் அறிவிப்பு!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநராக தன்னை நிரூபித்துள்ளார். இந்த இளம் வயதிலேயே சூப்பர்ஸ்டார் ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த கதைகளில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பான பல கதைக்களங்களில் தன்னை சிறப்பான இயக்குநராக இந்திய அளவில் நிலைநிறுத்தியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சாவில் தொடங்கிய இவரது பயணம் பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து வருகிறது.

சூப்பர்ஸ்டாரின் பேட்ட படம்

சூப்பர்ஸ்டாரின் பேட்ட படம்

குறிப்பாக சூப்பர்ஸ்டாரை வைத்து இவர் இயக்கிய பேட்ட படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. அடுத்தடுத்து தனுஷ், விக்ரம் உள்ளிட்டவர்களை இயக்கி வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படம் கேங்ஸ்டர் கதையாக வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

விக்ரமின் மகான் வெற்றிப்படம்

விக்ரமின் மகான் வெற்றிப்படம்

அடுத்ததாக விக்ரம், த்ருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் மகான் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசானது. இந்தப் படமும் கேங்ஸ்டர் கதையாகவே வெளியானது. ஆயினும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். சிறப்பான வரவேற்பை இந்தப் படம் பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் அடுத்தப்படம்

கார்த்திக் சுப்புராஜ் அடுத்தப்படம்

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவரது இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராகவா லாரன்சுடன் இணையும் இயக்குநர்

ராகவா லாரன்சுடன் இணையும் இயக்குநர்

இந்தப் படத்தில் சித்தார்த்திற்கு பதிலாக தற்போது ராகவா லாரன்ஸ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாகத்தில் அசால்ட் சேதுவாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பாபி சிம்ஹா இந்தப் படத்திலும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜிகர்தண்டா 2 படம்

ஜிகர்தண்டா 2 படம்

இந்தப் படம் ஜிகர்தண்டாவின் அடுத்த பாகமா அல்லது வேறு கதைக்களத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்துள்ளாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும். ஹீரோயின் உள்ளிட்டவர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X