தலைவி படம் பார்த்த தலைவர்... என்ன சொன்னார் தெரியுமா ?

சென்னை : டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தலைவி. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படம் செப்டம்பர் 10 ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 3 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் கங்கனாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Recommended Video

Thalaivi Kangana Ranaut EXCLUSIVE INTERVIEW | Vijay தான் என்னோட Ultimate Hero

அரிய வகை நோயால் போராடும் கிளாடி சாராவின் உயிரை காக்க உதவுங்கள் ப்ளீஸ்

தலைவி படத்தில் லீட் ரோலான ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரணாவத், எம்ஜிஆர்., ஆக அரவிந்த் சாமி, சசிகலாவாக பூர்ணாவும் நடித்திருந்தனர். இவர்களுடன் நாசர், மதுபாலா, தம்பி ராமைய்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

ஈர்க்க தவறிய தலைவி

ஈர்க்க தவறிய தலைவி

நடிகையாக இருந்து அரசியல் ஆளுமையாகவும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக தலைவி எடுக்கப்பட்டது. வசூலை குவிக்காவிட்டாலும் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது. அதே அளவிற்கு விமர்சனங்களை பெற்று, ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்க தவறிவிட்டது.

அரசியல் விமர்சனங்கள்

அரசியல் விமர்சனங்கள்

ஆனால் இந்த படத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்ததாக காட்டப்படும் சில நிகழ்வுகள் உண்மைக்கு புறம்பாக திரித்துக் கூறப்பட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். அரசியல் தலைவர்கள் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமர்சித்து வருகின்றனர்.

அருமையான வாழ்க்கை படம்

அருமையான வாழ்க்கை படம்

அதே சமயம் பெரும்பாலான ரசிகர்கள், மிகச் சிறப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டு, ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். க்ளைமாக்ஸ் காட்சிகள் ஒரு புறம் வரவேற்பையும், மற்றொரு புறம் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

தலைவி 2 இயக்க திட்டம்

தலைவி 2 இயக்க திட்டம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். இதனால் தலைவி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பார்ட் 2 கதை இதுதானா

பார்ட் 2 கதை இதுதானா

தலைவி படத்தில் நடிகையாக இருந்த ஜெயலலிதா, எப்படி அரசியல் தலைவராக உருவெடுத்தார் என்பதை மட்டுமே காட்டி உள்ளனர். மிகப் பெரிய அரசியல் ஆளுமையாக, பல வெற்றிகளை கண்ட பெண் முதல்வராக அவர் வளர்ந்ததை காட்டவே இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைவியை பார்த்த தலைவர்

தலைவியை பார்த்த தலைவர்

இந்நிலையில் கோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவலாக, ரஜினிகாந்த்திற்கு தலைவி படம் பிரத்யேகமாக போட்டு காண்பிக்கப்பட்டதாம். படத்தை பார்த்து விட்டு, டைரக்டர் ஏ.எல்.விஜய்யை போனில் அழைத்த ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான வாழ்க்கை படத்தை இயக்கியதற்காக டைரக்டர் விஜய்யை மிகவும் பாராட்டி உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X