மொட்டை அடிப்பேன் உன்னை...மீண்டும் மோதும் நிரூப் – அபினய்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறு வாரங்களைக் கடந்து, ஏழாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 18 போட்டியாளர்களில் இதுவரை 6 பேர் வெளியேறி உள்ளனர். தற்போது 12 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.
இந்த வாரம் சுருதியை தொடர்ந்து மதுமிதா வெளியேறி உள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வார தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டியும், வரும் வாரத்திற்கான நாமினேஷனும் நடத்தப்பட்டது.

தலைவரான பிரியங்கா
இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டார். இந்த வாரம் வீட்டை ஆளுமை செய்வதற்கான அதிகாரம் வருணுக்கு வழங்கப்பட்டது. இந்த வாரமும் ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஏழாவது வாரமாக அபினய் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

கண்ணாடி டாஸ்க்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் ஒருவருக்கு மற்றொரு கண்ணாடியாக இருந்து அவரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி காட்ட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு கண்ணாடி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 44 வது நாளான இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோவில் யார், யாருடைய கண்ணாடி என்பதை தெரிவிக்கிறார் ராஜு. யார் யாருக்கு இடையே அடிக்கடி மோதல் நிலவுகிறதோ அவர்களை ஜோடி சேர்த்து விட்டுள்ளார் பிக்பாஸ். இது போட்டியாளர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் ரசிக்க வைத்துள்ளது.

நிரூப் - அபினய் மோதல்
இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் மற்றும் அபினய் இடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி போலி என சொல்லி திட்டிக் கொள்கிறார்கள். அப்போது, பிரியங்கா சமாதானப்படுத்த போய், ஏன்டா தனிப்பட்ட முறையில் ஏதேதோ சொல்லி திட்டிக் கொள்கிறீர்கள் என்கிறார்.

மொட்டை அடிக்க போறேன்
தொடர்ந்து நிரூப், உன்னை மொட்டை அடித்துக் கொள்ள வைக்கிறேன் என்றார். அதற்கு பதிலுக்கு அபினய்யும், உன்னை மொட்டை அடிக்கிறேன் பார் என்கிறார். இதைக் கேட்டு ஹவுஸ்மேட்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

கொளுத்திப் போட்ட பிக்பாஸ்
இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள், நீங்கள் ஒன்னும் பண்ணுற மாதிரி தெரியல. அதனால நானே பண்ணுறேன்னு பிக்பாசே கொளுத்தி போட்டுட்டார். நிரூப் எப்பவுமே கேம் ஸ்பாயில் பண்றார். பிரியங்கா தொகுப்பாளர்னு நிரூபிக்கிறார். எப்பவும் தொன தொனன்னு பேசிட்டு இருக்கிறார்.

நிரூப் ரொம்ப பேசுறார்
நிரூப் ஒருநாள் அதிகமாக வாய் விட்டு மாட்டிக்க போறான். அதோட டோட்டல் இமேஜும் காலி. மொட்டை அடிக்க போறாங்களாமே. என்னடா நடக்குது இங்க. பிக்பாஸ் குசும்புக்காரர். யாருக்கும் யாருக்கும் பிடிக்காதோ அவங்களுக்குள்ளயே கேம் வைக்கிறார். அபினய் சபாஷ், நிரூப் கிட்ட ஆர்க்யூ பண்ண நீங்களாச்சும் ரெடியா இருக்கீங்களே என நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











