மீண்டும் மீண்டும் முட்டாள்தனமாவே பேசுறாரு ப்ளூ சட்டை மாறன்.. விளாசித் தள்ளிய பார்த்திபன்!
சென்னை: இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என அறிவித்து வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
Recommended Video
ஆனால், அந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை என்றும் ஈரானிய படமான ஃபிஷ் அண்ட் கேட் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என தனது விமர்சனத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார் ப்ளூ சட்டை மாறன்.
இந்நிலையில், ஃபிஷ் அண்ட் கேட் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட்டை ரீட்வீட் செய்த பார்த்திபன் ப்ளூ சட்டை மாறனை விளாசித் தள்ளி இருக்கிறார்.

டி. இமான் பாராட்டு
இரவின் நிழல் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த படத்தை மனதார பாராட்டி இருந்தார். படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், தற்போது படத்தை பார்த்த இசையமைப்பாளர் டி. இமான் இரவின் நிழல் படத்தையும் அதை இயக்கி நடித்த பார்த்திபனையும் வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் வாழும் காலத்தில் நானும் இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என அவரது இசையையும் பாராட்டி உள்ளார் டி. இமான்.

தொடரும் பஞ்சாயத்து
பார்த்திபன் இயக்கி நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என அறிவித்து வெளியிட்டனர். ஆனால், அந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை என்றும் ஈரானிய படமான ஃபிஷ் அண்ட் கேட் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.

அந்த படம் நான் லீனியர் இல்லை
இந்நிலையில் தற்போது ஃபிஷ் அண்ட் கேட் எனும் ஈரானிய படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அந்த படம் உலகின் முதல் நான் லீனியர் படம் இல்லை. அதில், வரும் குரல் மட்டுமே நான் லீனியராக இருக்கும். ஆனால், காட்சிகள் லீனியராகத்தான் நகரும். அந்த படத்திற்கும் கின்னஸ் விருது ஏதும் கொடுக்கவில்லை என ரசிகர் ஒருவர் ப்ளூ சட்டை மாறனின் கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போட்டிருந்தார்.

இடியாட்டிக் ஆர்க்யூமென்ட்ஸ்
அந்த ட்வீட்டை ஷேர் செய்துள்ள நடிகர் பார்த்திபன் மீண்டும் மீண்டும் இதே போன்ற இடியாட்டிக் ஆர்க்யூமென்ட்ஸைத் தான் ப்ளூ சட்டை மாறன் முன் வைத்து வருகிறார் என கோபத்தின் உச்சிக்கே சென்று வெளுத்து இருக்கிறார். இந்த பிரச்சனை இந்த வாரம் புதிய படங்கள் வந்த உடன் முடிந்து விடும், ப்ளூ சட்டை மாறன் அடுத்த பட இயக்குநர்களை விமர்சிக்க கிளம்பி விடுவார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











