மீண்டும் வம்பிழுத்த ப்ளூசட்டை மாறன்...வச்சு செய்யும் அஜித்தியன்ஸ்

சென்னை : அஜித்தையும், அவரது ரசிகர்களையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன், இன்று மீண்டும் வம்பிழுத்துள்ளார். தினமும் புது புது விஷயங்களாக தோன்டி எடுத்து ட்வீட் செய்து வரும் அவர் இன்று செலிப்ரிட்டிகளையும் சேர்த்து வம்பிழுத்துள்ளார்.

அஜித் நடித்த வலிமை படத்திற்கு விமர்சனம் செய்ததுடன் விடாமல் அஜித் பாடலுக்கு டான்ஸ் ஆடிய போட்டோவை பதிவிட்டு, பரோட்டாவிற்கு மாவு பிசைகிறார் என கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். திரை பிரபலங்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனின் கருத்தை மிக கடுமையாக எதிர்த்து, ட்விட்டரில் கருத்து பகிர்ந்து வந்தனர்.

அஜித்தை மோசமாக விமர்சித்து ட்வீட்

அஜித்தை மோசமாக விமர்சித்து ட்வீட்

இருந்தாலும் அவற்றை கண்டு கொள்ளாத ப்ளூ சட்டை மாறன், தொடர்ந்து அஜித்தையும் அஜித்தின் ரசிகர்களையும் கண்டபடி விமர்சித்து தொடர்ந்து ட்வீட் போட்டு வருகிறார். நேற்று அஜித் நடித்த ரெட் படத்தின் பாடலை குறிப்பிட்டு அவர் இரட்டை அர்த்த பாடலில் நடித்துள்ளார். மோசமான மனநிலை, பெண்களை தவறாக பார்ப்பவர்கள் மட்டுமே இப்படி பட்ட பாடல்களை எழுத முடியும், அதில் நடிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பப்ளிசிட்டி தேவையா

இந்த பப்ளிசிட்டி தேவையா

அஜித் நடித்த ரெட் படம் 2002 ம் ஆண்டு ரிலீசானது. 20 வருடங்களுக்கு முன் அஜித் நடித்த ஒரு பாடலை வைத்து அவரை மோசமானவர் என பேசுவதையும் பலர் கண்டித்திருந்தனர். ஒரு ட்வீட்டை போட்டு விட்டு, அதை நியாயப்படுத்த இவ்வளவு மெனக்கெட்டு, இத்தனை ட்வீட் போடுறீங்களே. இந்த பப்ளிசிட்டி உங்களுக்கு தேவையா என இதை வைத்தும் ப்ளூ சட்டை மாறனை அஜித் ரசிகர்கள் கண்டபடி விளாசி வருகின்றனர்.

வக்கில்லாத செலப்ரிட்டிகள்

வக்கில்லாத செலப்ரிட்டிகள்

இந்நிலையில் இன்று, பால் பாக்கெட்களை மட்டுமல்ல. குடிநீர் கேனையும் திருடி சாலையில் கொட்டி அராஜகம் செய்யும் கூட்டம். இவர்களை கண்டிக்க வக்கில்லாத சுண்டைக்காய் செலப்ரிட்டிகள். Do you have the guts to open your mouth now? என கேட்டு ட்வீட் போட்டுள்ளார். ஆனால் இதையும் வைத்து அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை ஒரு வழி செய்து வருகின்றனர். அவர் பப்ளிசிட்டிக்காக ஒவ்வொரு மாதமும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார் என விமர்சித்துள்ளனர்.

அன்று பாராட்டு; இன்று விமர்சனம்

அன்று பாராட்டு; இன்று விமர்சனம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இனி என்னை தல என யாரும் அழைக்க வேண்டாம். அஜித், அஜித்குமார், ஏகே என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த சமயத்தில் அஜித்தின் இந்த அறிக்கை பற்றிய செய்தியை ரீட்வீட் செய்து, இவர் மானஸ்தர். ரசிகர் மன்ற கலைப்பு. அல்டிமேட் ஸ்டார், தல பட்டம் துறப்பு. ஆனால் கட்சியே ஆரம்பிக்காமல். மக்களுக்கு நல்லது செய்யாமல். தலைவர் பட்டத்தை வைத்துள்ளார் ஒருவர். அவர் யார் என கேட்டு ட்வீட் போட்டிருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

இதுதான் செம ஹைலைட்

இதுதான் செம ஹைலைட்

இதையும் குறிப்பிட்டுள்ள விஜய் ரசிகர்கள், கடந்த மாதம் அண்ணாத்த. இப்போ வலிமை. அடுத்த பீஸ்ட் படம் வந்ததும் நம்ம பக்கம் வருவார் என குறிப்பிட்டுள்ளனர். அஜித்தையும், அஜித் ரசிகர்களையும் விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி உள்ளது தான் இதில் மிகப் பெரிய ஹைலைட்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X