பெரிய குண்டு பல்பு வாங்கிய நிரூப்.. முதலில் சேவ் ஆகி கெத்துக்காட்டிய ராஜு.. பாவனியை பார்க்கணுமே!

சென்னை: இந்த வாரத்தின் முதல் நாளே கருப்பு ரோஜாவை கொடுத்து நிரூப்பை வெளியே வைத்த நிலையில், கடுப்பான நிரூப் தாமரை மற்றும் பாவனியிடம் முடிந்த வரை தனியாக பிரைன் வாஷ் செய்தார்.

மேலும், இந்த வாரம் தான் தான் முதல் நபராக சேவ் ஆகப் போகிறேன் என சவால் விட்டார்.

ஆனால், வழக்கம் போல இந்த வாரமும் முதல் நபராக சேவ் ஆகி ராஜு கெத்துக்காட்டியது நிரூப் மற்றும் பாவனியால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

கமலுக்குத் தெரியும்

கமலுக்குத் தெரியும்

இந்த சீசனில் இருப்பவர்களில் அதிக ஓட்டுக்கள் ராஜுவுக்குத் தான் வருகிறது என்பது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் சாருக்கு தெரியாமலா இருக்கும். அதன் காரணமாகவே ராஜுவை லேசாகவே டேமேஜ் செய்து அதிக இடத்தில் வார்த்தை வித்தைக்காரர் ராஜு என பாராட்டித் தள்ளி வருகிறார்.

சவால் விட்ட நிரூப்

சவால் விட்ட நிரூப்

டிக்கெட் டு ஃபினாலேவின் முதல் போட்டியான டின்னர் டாஸ்க்கில் இந்த வாரம் 5 நபர்களால் நாமினேட் செய்யப்பட்ட நிரூப்பை ஏன் நாம் வெளியே அனுப்பக்கூடாது என சிபி ஆரம்பித்து வைத்த நிலையில், நிரூப் மற்றும் தாமரைக்கு எதிராக வாக்குகள் வந்தன. கடைசியில் நிரூப்பை வெளியேற்ற அனைவரும் முடிவு செய்து வெளியேற்றிய நிலையில், இந்த வாரம் முதல் நபராக சேவ் என கமல் சார் சொல்லல இந்த படையப்பன் மூச்சு நின்னுப் போச்சு என்பது போல தாமரையிடம் வசனம் எல்லாம் பேசினார் நிரூப்.

ராஜுவுக்கு எதிராக

ராஜுவுக்கு எதிராக

அதன் காரணமாகவே பிரியங்காவை முதலில் டேமேஜ் பண்ணாமல் ராஜுவை பற்றியே அதிகளவில் கமல் சாரிடம் போட்டுக் கொடுத்து ராஜுவின் முகத்திரையை கிழித்து எறிய நிரூப் ரொம்பவே போராடினார். ஆனால், முதலில் யார் காப்பாற்றப் பட போகிறார் என்பதை அறிந்து கொண்ட கமல் நிரூப்பை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிந்ததாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் சேவான ராஜு

ஃபர்ஸ்ட் சேவான ராஜு

நாமினேஷனில் வந்த நிலையில், 4வது முறையாக ஃபர்ஸ்டாக சேவ் ஆகி கெத்துக் காட்டி உள்ளார் ராஜு ஜெயமோகன். ராஜுவை இந்த வாரம் ரொம்ப விக்காக காட்டுகிறார்களே ஒரு வேளை பிரியங்கா முதலில் சேவ் ஆவாரோ என எதிர்பார்த்தால் வாய்ப்பே இல்லை ராஜு தான் முதலில் காப்பாற்றப்பட்டார் என கமல் சொல்லி சென்றார்.

பெரிய குண்டு பல்பு

பெரிய குண்டு பல்பு

மேலும், இந்த வாரம் கமல் சார் முதலில் சேவ் ஆனது நிரூப் என்று சொல்லவில்லை என்றால் பார் என சவால் விட்ட நிரூப்புக்கு சனிக்கிழமை எபிசோடில் பெரிய குண்டு பல்பு பார்சல் செய்யப்பட்டது. இந்த வாரம் முதலில் சேவ் ஆகும் நபருக்குத் தான் டைட்டில் என்பது 99 சதவீதம் கன்ஃபார்ம் ஆன உண்மை.

பாவனியை பார்க்கணுமே

பாவனியை பார்க்கணுமே

நிரூப்பை தொடர்ந்து ராஜு பற்றி அதிகமாக புகார் கொடுத்தது பாவனி தான். கடந்த சீசனில் ஆரிக்கு எதிராக ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், அர்ச்சனா உள்ளிட்ட பலர் பேசிய நிலையிலும் ஆரி வின் பண்ணது போலவே இந்த சீசனில் எத்தனை குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டாலும் ராஜுவுக்கே மக்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்து வருகின்றனர். ராஜு முதலில் சேவ் என கமல் சொன்னதும் இத்தனை நேரம் போராடியது எல்லாம் வீண் தான் போல நாமும் பிரியங்கா மாதிரி புரிந்து கொண்டு கோபால் உடன் ஜீலி பண்ண ஆரம்பித்து விட வேண்டியது தான் என பிளான் போட்டிருப்பார் என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X