‘ஆண்டிப்பட்டி கனவா காத்து' டீம்..மாமனிதன் -ல் தொடரும் வி.எஸ், யுவன், சீனு ராமசாமியின் வெற்றி காம்போ!

சென்னை : விஜய் சேதுபதி - டைரக்டர் சீனு ராமசாமி காம்போவில் உருவாகி, நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு இன்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ள படம் மாமனிதன். இதுவரை இந்த படம் பாசிடிவ் விமர்சனங்களையே பெற்றுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்கைளைத் தொடர்ந்து நான்காவது முறையாக சீனு ராமசாமி - விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் இணைந்துள்ளது. ஆனால் இடம் பொருள் ஏவல் படம் இதுவரை ரிலீசாகவில்லை. இதனால் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அடிப்படையில் பார்த்தால் சீனு ராமசாமி - விஜய் சேதுபதி இணைந்துள்ள மூன்றாவது படம் தான் மாமனிதன்.

2017 ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டு, 2019 ம் ஆண்டு ஷுட்டிங் முடிக்கப்பட்ட போது தயாரிப்பு நிறுவனத்துடனான ஏற்பட்ட பிரச்சனைகளால் முடங்கி கிடந்த மாமனிதன் படம் யுவன்சங்கர் ராஜாவின் முயற்சியால் இன்று ரிலீசாகி, நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

மாற்றம் தந்த மாமனிதன்

மாற்றம் தந்த மாமனிதன்

பான் இந்தியா, பிரம்மாண்டம், மாஸ் ஆக்ஷன் என தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கையில் இது போன்ற குடும்ப படங்கள், நல்ல படங்கள், உணர்வுபூர்வமான படங்கள் எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும். தமிழ் சினிமா ரசிகர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அது எந்த மாதிரியான மாற்றம் என்பதை மாமனிதன் படம் காட்டி உள்ளது.

தேசிய விருது கூட்டணி

தேசிய விருது கூட்டணி

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்த படம் தென்மேற்கு பருவக்காற்று. எளிமையான கிராமத்து கதை தான் இருந்தாலும் இந்த படம் பேசப்பட்டது. சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதினை பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்களின் காம்போவின் உருவான தர்மதுரை படமும் கிராமத்து காதல் கதை தான். அந்த படமும் தேசிய விருது பெற்றது. "எந்த பக்கம் பார்க்கும் போது வானம் ஒன்று தான்" பாடலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது.

மாமனிதனிலும் நிரூபித்தது

மாமனிதனிலும் நிரூபித்தது

தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது மாமனிதன் படம். இதுவும் கிராமத்து கதை தான். மாஸ் ஆக்ஷன் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள், பான் இந்தியா படங்கள் தான் வெற்றி பெறும். நல்ல கதை கொண்ட படங்கள் மற்றும் சோஷியல் மெசேஜ் சொல்லும் படங்கள் எல்லாம் ஓடிடி.,யில் மட்டும் தான் வரும். அதிலும் சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற ஒரு சில படங்கள் தான் வெற்றி பெறும். மற்ற படங்கள் பெயரளவிலேயே வெற்றி பெறும் என்ற டிரெண்டை மாமனிதன் படம் உடைத்துள்ளது.

மாமனிதனுக்கு தேசிய விருது கன்ஃபார்ம்

மாமனிதனுக்கு தேசிய விருது கன்ஃபார்ம்

நல்ல படங்கள், அதுவும் தங்களின் வாழ்க்கையோ, உணர்வுகளோடு கனெக்ட் செய்யும் எந்த படமாக இருந்தாலும், எத்தனை ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வெளிவந்தாலும் அதற்கு ரசிகர்களின் வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்பதை மாமனிதன் படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் நிரூபித்து காட்டி உள்ளன. தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களின் வரிசையில் மாமனிதன் படத்திற்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்றே சொல்லப்படுகிறது.

இவங்களே சொல்லிட்டாங்க வேற என்ன வேணும்

இவங்களே சொல்லிட்டாங்க வேற என்ன வேணும்

பிரம்மாண்ட பட இயக்குனர், இந்தியாவின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவர் என்று அனைவராலும் கொண்டாடப்படும் டைரக்டர் ஷங்கரே மாமனிதன் படத்தை பார்த்து விட்டு, பாராட்டி உள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு அழகான குடும்ப படம் பார்த்து பயணித்த அனுபவம் ஏற்பட்டுள்ளதாக பிரபலங்கள் பலர் மனம் திறந்து பாராட்டி உள்ளனர். விஜய் போன்ற டாப் நடிகர்களும் குடும்ப சென்டிமென்ட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால் இனி தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட, குடும்ப படங்கள் வருவதற்காக வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இனி இந்த மாதிரி படங்களும் வரும்

இனி இந்த மாதிரி படங்களும் வரும்

அந்த வகையில் தமிழ் சினிமாவின் போக்கை, டிரெண்டை மாற்றி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பெருமை சீனு ராமசாமி - விஜய் சேதுபதி - யுவன் சங்கர் ராஜா கூட்டணிக்கு கிடைத்துள்ளது. பான் இந்தியா படங்கள் நோக்கி ஓடியவர்களின் எண்ணத்தை மாற்றி, விருது பெறுவதற்கு தகுதியான வகையிலான படங்களை இனி தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கலாம் என்ற எண்ணம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X