»   »  நடிகர் அஜித்துக்கு தோள்பட்டையில் ஆபரேஷன்! 3 மாதங்களுக்கு ஓய்வு

நடிகர் அஜித்துக்கு தோள்பட்டையில் ஆபரேஷன்! 3 மாதங்களுக்கு ஓய்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது படத்தின் சண்டைக்காட்சிகளில் எப்போதும் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடியவர்.

ஸ்டன்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் அவரே நடிப்பதால் அவ்வப்போது உடலில் காயம் ஏற்பட்டு சில ஆபரேஷன்களும் செய்துள்ளார். சமீபத்தில் வெளியான 'விவேகம்' படத்தின் ஷூட்டிங்கிலும் அஜித் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார்.

Again surgery for Ajith

இதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்துக்கு சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது. சிகிச்சை முடிந்து அஜித் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

ஆபரேஷன் முடிந்திருக்கும் நிலையில், மருத்துவர்கள் மூன்று மாதங்கள் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தி உள்ளனர். மூன்று மாதங்கள் ஓய்வுக்குப் பிறகே அஜித், அடுத்த படத்தில் நடிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

அஜித்தை இயக்க முன்னணி இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். அஜித்தின் முந்தைய படங்களை இயக்கிய சிவாவே இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், 'விவேகம்' படத்தின் விமர்சனங்கள் எதிர்மறையாக வெளிவந்தன. இந்நிலையில், அடுத்த பட வாய்ப்பு யாருக்குக் கிடைக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

English summary
Actor Ajith is always take risks in stunt scenes of his film. He injured in 'Vivegam' shooting and now got surgery in shoulder.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil