தள்ளிப் போகிறதா பொன்னியின் செல்வன்.. ஜெயம் ரவியின் அகிலன் பட ரிலீஸ் தேதியால் ரசிகர்கள் குழப்பம்!

சென்னை: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்து விட்டு ஹேர்கட் எல்லாம் செய்த பின்னர் நடிகர் ஜெயம் ரவி நடித்த அகிலன் படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

ஹார்பரில் நடக்கும் கடத்தல்கள் மற்றும் பிளாக் மார்க்கெட்டை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தை இயக்குநர் கல்யாண கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் அகிலன்

ஜெயம் ரவியின் அகிலன்

நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமாக ஆரம்பித்த அகிலன் திரைப்படம் விறுவிறுவென படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து ரிலீசுக்கே ரெடியாகி விட்டது. தற்போது அந்த படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பகக்த்தில் தற்போது அந்த டீசரை வெளியிட்டுள்ளார்.

அகிலன் டீசர்

அகிலன் டீசர்

இயக்குநர் கல்யாண கிருஷ்ணா இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள அகிலன் படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி உள்ளது. ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். மிராக்கள் மைக்கேல் என்பவர் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கருப்பு நிற மேக்கப் உடன் வித்தியாசமான லுக்கில் நடிகர் ஜெயம் ரவி படம் முழுக்க வருகிறார். எதிரிகளை புரட்டிப் போட்டு அடிப்பதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், கடலில் இருந்து உப்பை பிரித்தெடுத்தாலும் எடுக்கலாம், ஆனால், இந்த ஹார்பரில் இருந்து அகிலனை பிரித்து எடுக்க முடியாது என ஹரி படம் வசனம் போல இருப்பதை சற்றே தவிர்த்து இருக்கலாம்.

போலீஸ் லுக் செட்டே ஆகல

போலீஸ் லுக் செட்டே ஆகல

தடம் படத்தில் போலீஸ் உடையில் வித்யா பிரதீப் செம காமெடியாக வருவதை போலவே டீசரில் இரு இடங்களில் ஒரே ஷாட்டாக வரும் பிரியா பவானி சங்கரின் போலீஸ் லுக் செட்டே ஆகவில்லை. மற்ற படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் பிரியா பவானி சங்கர் படத்தில் எப்படி நடித்து இருக்கிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

தள்ளிப் போகிறதா பொன்னியின் செல்வன்

தள்ளிப் போகிறதா பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு படத்திற்கான எந்தவொரு புரமோஷன் பணிகளும் ஆரம்பிப்பதாக தெரியவில்லை. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள ஜெயம் ரவியின் அகிலன் டீசரில் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என அறிவித்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X