»   »  கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் 'அஞ்ஞாதவாசி' படம் சாதனை... யூ-ட்யூபில் தெறிக்கும் லைக்ஸ்!

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் 'அஞ்ஞாதவாசி' படம் சாதனை... யூ-ட்யூபில் தெறிக்கும் லைக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தியத் திரையுலகில் தமிழ்ப் படங்கள் யூ-ட்யூபில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றன. ரசிகர்களின் போட்டியால் வெளியிடப்பட்டும் டீசர், ட்ரெய்லர் ஆகியவை செம ஹிட் ஆகின்றன.

தமிழ் சினிமாவை விட அதிக மார்க்கெட் கொண்ட இந்தி திரையுலகமே இன்னும் தமிழ்ப் படங்களின் சாதனைகளைத் தொட முடியாமல் இருக்கிறது.

டோலிவுட் வட்டாரத்தினர் தற்போதுதான் இந்த போட்டிக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். சமீபத்திய சில படங்களின் டீசர், ட்ரெய்லர்கள் செம ஹிட் ஆகி வருகின்றன.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல், குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள 'அஞ்ஞாதவாசி' படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. முந்தைய பவன் கல்யாண் பட சாதனைகளை முறியடித்து பெரும் வசூலை இந்தப் படம் குவிக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா

தமிழ் சினிமா

தமிழ்த் திரையுலகத்தை விட பெரிய திரையுலகமான தெலுங்கு சினிமாவில் யூ-ட்யூப் சாதனை என்பது இன்னும் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது. சமீபத்தில் வெளியான 'அஞ்ஞாதவாசி' படத்தின் டீசர் தெலுங்குத் திரையுலகத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

5 லட்சம் லைக்ஸ்

5 லட்சம் லைக்ஸ்

'அஞ்ஞாதவாசி' டீசர் தற்போது ஐந்து லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளது. மொத்த பார்வைகளின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கும் தெலுங்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.

அனிருத் இசை

தெலுங்கு சினிமாவில் புதிய மைல்கல் சாதனையைப் புரிந்த படத்தில் இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த அனிருத் அறிமுகமாவதும் நிச்சயம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்றுதான்.

English summary
Pawan kalyan, keerthi suresh starred 'Agnyaathavaasi' Teaser has crossed five lakh likes now. The total number of views has crossed 1 crore 26 lakh. 'Agnyaathavaasi' makes new milestone in tollywood industry.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil