»   »  முன்னாடி பேய்... இப்போ விவசாயம் - தமிழ் சினிமாவில் இது விவசாய சீசன்!

முன்னாடி பேய்... இப்போ விவசாயம் - தமிழ் சினிமாவில் இது விவசாய சீசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் படத்தில் ஜூலியும் நடிக்கிறாரா..

சென்னை : தமிழ் சினிமாவில் ஹாரர் பட சீசன் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சில வருடங்களாக வரிசையாக பேய்ப் படங்களாக வெளிவந்து பேய்களையே காமெடி பீஸ் ஆக்கின.

புதிய முயற்சிகளைக் கொண்டு வெளியாகும் படங்களுக்கும் தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், விவசாயம் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள் இயக்குநர்கள்.

விவசாயம் பற்றியும், விவசாயிகள் பிரச்னைகளையும் மையமாகக்கொண்ட படங்கள் தற்போது அதிகமாக தயாராகி வருகின்றன.

விஜய் 62

விஜய் 62

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படத்தில் விவசாயிகள் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் நடித்தார் விஜய். அதையடுத்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் தனது 62வது படத்திலும் விவசாய பிரச்னையை முன்னிலைப்படுத்தி நடித்து வருகிறார் விஜய்.

விஷத்தன்மை கொண்ட பொருட்கள்

விஷத்தன்மை கொண்ட பொருட்கள்

விஜய் 62 படத்திலும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையைத்தான் படமாக்குகிறார் முருகதாஸ். இந்தப் படத்தில் விவசாயிகளின் பிரச்னை மட்டுமின்றி, உலக மக்களுக்கே உணவு கொடுக்கும் விவசாயிகள், அவர்களுக்கே தெரியாமல் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் விஷத்தன்மை வாய்ந்த உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் விஷயத்தையும் சொல்லப் போகிறார்களாம்.

வெள்ளை யானை

வெள்ளை யானை

அதேபோல், சுப்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் 'வெள்ளை யானை' என்ற படமும் விவசாயி பிரச்னையை சொல்லும் கதையில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சமுத்திரகனி விவசாயியாகவே நடித்து வருகிறார்.

பூமராங்

பூமராங்

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் 'பூமாரங்' படம் ஆக்ஷ்ன் கதையில் உருவானாலும் அதில் விவசாயம் சம்பந்தமான ஒரு ஆழமான விஷயத்தை பதிவு செய்ய இருக்கிறார்களாம். இதுதவிர இன்னும் சில படங்கள் விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகின்றன.

English summary
The horror film season in Tamil cinema is now gradually diminishing. In this case, the directors are turning to agriculture. 'Vijay 62', Samuthirakani's 'Vellai yaanai' and Atharva starring 'Bhoomarang' are telling about problems of farmers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil