»   »  கபாலி... செங்கல்பட்டு ஏரியா உரிமையைப் பெற்றது ஏஜிஎஸ்!

கபாலி... செங்கல்பட்டு ஏரியா உரிமையைப் பெற்றது ஏஜிஎஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையைப் பெற்றது கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம்.

கலைப்புலி தாணு தயாரித்த தெறி படத்தை செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் எம்ஜி அடிப்படையில் திரையிட மறுத்ததால், செங்கல்பட்டு தவிர பிற ஏரியாக்களில் தெறி வெளியானது. தேர்ந்தெடுத்த சில அரங்குகளில் மட்டும் இந்தப் படத்தை தாணு வெளியிட்டார்.


AGS snaps Kabali Chengalpet distribution rights

எனவே கபாலி படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது.


செங்கல்பட்டு ஏரியாவில் கபாலி படத்தை வெளியிடும் உரிமையை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமே எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் செங்கல்பட்டு விநியோக உரிமையை எங்கள் ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைத் தந்ததற்காக ரஜினி சார் மற்றும் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


படத்தை வெளியிடும் நாளுக்காக தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கபாலி குறித்த மக்களின் எதிர்ப்பார்ப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது," என்று தெரிவித்துள்ளனர்.

English summary
AGS Entertainment Private Limited Promoted by Kalpathi Brothers Kalpathi S Aghoram , Kalpathi S Ganesh and Kalpathi S Suresh has bagged the distribution rights of much awaited block buster Rajnikanth movie Kabali produced by V Creations for Chenglepet area for an undisclosed price.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil