»   »  அஜீத் கேட்கும் அதிக சம்பளம்... தாமதமாகிறது புதுப்பட அறிவிப்பு!

அஜீத் கேட்கும் அதிக சம்பளம்... தாமதமாகிறது புதுப்பட அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு புதுப்படத்துக்கு அஜீத் இப்போது கேட்கும் சம்பளம் எவ்வளவு? சிலர் நான்கு விரல்களைக் காட்டுகிறார்கள். சிலர் மூன்று விரல்களைக் காட்டுகிறார்கள். அதாவது நாற்பது சி.. முப்பது சி...!

ஆனால் ஒரிஜினல் கணக்கு யாருக்கும் தெரியாத விஷயம்.

Ahy Ajith's new movie announcement delayed?

அஜீத்துக்கு சம்பளம் தரும் முறை எப்படி தெரியுமா...? ஆரம்பத்தில் எதுவும் வாங்கிக் கொள்ள மாட்டாராம். ஆனால் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே மொத்தப் பணத்தையும் வாங்கிவிடுவாராம்.

அவருக்கு பேசப்படும் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் உள்ளிட்டவற்றை தயாரிப்பாளரே செலுத்திவிட்டு, மீதியைத் தந்துவிட வேண்டுமாம்.

இப்போது வேதாளம் படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட அஜீத், தனது அடுத்த புதுப் படத்தை அறிவிக்காமல் உள்ளார். இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

நடிக்க அஜீத்தும், இயக்க விஷ்ணுவர்தனும் தயாராக இருக்க, ஏன் இன்னும் படத்தை அறிவிக்காமல் உள்ளார் அஜீத்?

சம்பளம்தானாம். அஜீத் கேட்கும் சம்பளம் மற்றும் அதை அவர் தரச் சொல்லும் விதம் போன்றவைதான் தயாரிப்பாளர்களை யோசிக்க வைக்கிறதாம். அதனால்தான் இன்னும் புதிய படத்தை அறிவிக்காமல் உள்ளார்களாம்.

English summary
Why Ajith's new movie announcement is delaying? Here is the reason for the delay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil