twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐ... 15 மொழிகளில்... 15000 அரங்குகளில்.. இதெல்லாம் சாத்தியம்தானா?

    By Shankar
    |

    ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கும், எப்போது வரும் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாத ஐ படம் பற்றி இன்று ஒரு நாளிதழில் வந்திருக்கும் தகவல்களைப் படித்து கோடம்பாக்கமே கிர்ரடித்துக் கிடக்கிறது.

    விக்ரம் - எமி நடித்துள்ள இந்தப் படத்தை 15 மொழிகளில் வெளியிடுவதாகவும், 15000 (ஆயிரத்து ஐந்நூறுன்னு படிச்சிடாதீங்க!) அரங்குகளில் வெளியிடுவதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

    சீனாவில்...

    சீனாவில்...

    அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் உங்கள் பார்வைக்கு..

    ஐ திரைப்படத்தை சீனாவில் மட்டும் 7000 அரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம். இதற்காக சீன மொழியில் டப்பிங் செய்யப் போகிறார்களாம். படத்தின் பல காட்சிகள் சீனாவில் இதுவரை யாரும் போயிராத பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளதால், சீனாவில் படம் நன்றாகப் போகும் என நம்புகிறார்கள்.

    ரூ 150 கோடி

    ரூ 150 கோடி

    ரூ 150கோடியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம் இந்த ஐ. ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் இது. அதுமட்டுமல்ல, ஆஸ்கர் ரவிச்சந்திரன் இத்தனை ஆண்டுகளில் இப்படியொரு பிரமாண்ட படத்தைத் தயாரித்ததே இல்லை.

    15 மொழிகள்...

    15 மொழிகள்...

    தமிழ் நீங்கலாக 10 இந்திய மொழிகளிலும், 4 வெளிநாட்டு மொழிகளிலும் ஐ படம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதாம். சீனா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளில் அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

    ரூ 45 கோடியில்..

    ரூ 45 கோடியில்..

    இன்றைக்கு ஒரு பிரமாண்ட தமிழ்ப் பட பட்ஜெட்டே 45 கோடி ரூபாய்தான். ஆனால் இந்தத் தொகையை, ஐ-யின் போஸ் புரொடக்ஷன் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்களாம்.

    இசை வெளியீடு

    இசை வெளியீடு

    ஆர் ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள பாடல்களை, சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் வெளியிடப் போகிறார்களாம். சென்னையில் நடக்கும் விழாவுக்கு பில் கிளிண்டன் மற்றும் அர்னால்டு ஸ்வாஸர்நெகரை வரவழைக்கப் போகிறார்களாம்.

    தமிழ்ப் படம் ஒன்று இத்தனை பிரம்மாண்டமாய் வெளியானதில்லை. மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மையாக நடந்தால், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் அது புதிய சாதனைதான்!

    English summary
    According to sources, Shankar's Ai movie is going to release in 15 languages and 15000 theaters worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X