twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "ஐ" படத்துக்கும் தி ஹன்ச்பேக் ஆப் நாஸ்டர்டாம், ஃபிளை படங்களுக்கும் என்ன சம்பந்தம்?!

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் காஸ்ட்லி இயக்குனரான ஷங்கரும், சினிமாவிற்காக தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் திறமையான நடிகரான விக்ரமும் இணைந்து கொடுக்க இருக்கும் மற்றொமொரு பிரமாண்ட திரைப்படம்தான் "ஐ". இந்த "ஐ" திரைப்படமானது ஆங்கில மொழியில் வெளிவந்த "தி ஹன்ச்பேக் ஆப் நாஸ்டர்டாம்" மற்றும் "ஃபிளை" ஆகிய படங்களின் தழுவல்தான் என்ற செய்தி இணையத்தில் உலா வர ஆரம்பித்துள்ளது.

    ஹாலிவுட்டின் ஜாம்பவான் அர்னால்டையெல்லாம் வரவழைத்து, மிகப் பிரமாண்டமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நடைபெற்றது. அப்படியென்னதான் அந்த இரண்டு ஹாலிவுட் படங்களின் கதை என்பதைத் தோண்டித்துருவிப் பார்த்தால் கிடைத்த முடிவுகள் இவைதான்.

    தி ஹன்ச்பேக் ஆப் நாஸ்டர்டாம்:

    தி ஹன்ச்பேக் ஆப் நாஸ்டர்டாம்:

    தி ஹன்ச் பேக் ஆப் நாஸ்டர்டாம் படமானது 1939இல் வெளியான ஒரு ஹாரர் மற்றும் திரில்லர், ரொமான்டிக் திரைப்படம். இப்படமானது விக்டர் கியூகோவின் "தி ஹன்ச் பேக் ஆப் நாஸ்டர்டாம்" என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

    பெல்பாய் குவசிமோடோ:

    பெல்பாய் குவசிமோடோ:

    முழுக்க முழுக்க நாஸ்டர்டாம் சர்ச்சை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. நாஸ்டர்டாம் சர்ச்சில் பெல் பாயாக இருப்பவர்தான் நம் கதாநாயகன், குவசிமோடோ. அவர் பிறவியிலேயே அழகற்றவராகவும், வளைந்த முதுகுடனும் பிறந்தவர்.

    தெருவோர ஜிப்சி அழகி எஸ்மெரால்டா:

    தெருவோர ஜிப்சி அழகி எஸ்மெரால்டா:

    அதே பாரிஸில் ஜிப்சி இனத்தைச் சேர்ந்த அழகான தெருவோர நடனபெண் தான் கதாநாயகி எஸ்மெரால்டா. எஸ்மெரால்டாவை அடைவதற்காக குவசியின் வளர்ப்புத் தந்தை, கேப்டன் ஒருவர், ஒரு தெருவோரக் கவிஞர் என பலரும் முயற்சிக்கின்றனர்.

    எஸ்மெரால்டாவை கடத்தும் குவசிமோடோ:

    எஸ்மெரால்டாவை கடத்தும் குவசிமோடோ:

    ஒருகட்டத்தில் தனது இளம்வயது சகோதரனுக்காக எஸ்மெரால்டாவைக் கடத்துகின்றார் குவசிமோடோ. எஸ்மெரால்டாவோ அந்த ஏழைக்கவிஞனான கிர்ன்கோரியைத்தான் காதலிக்கின்றார். குவசிமோடோ, எஸ்மெரால்டாவினை ஒரு குற்றத்திலிருந்து பாதுகாக்கின்றார்.

    குவசிமோடோவின் எலும்புகள்:

    குவசிமோடோவின் எலும்புகள்:

    இந்நிலையில், கேப்டனிடம் இருந்து தப்பித்து, தன்னுடைய காதலனுடன் இணைந்து விடுகின்றார் எஸ்மெரல்டா. ஆனால், சிறிது காலங்கள் கழித்து குவசிமோடோவின் எலும்புக்கூடுகள் மட்டும் ஒரு கல்லறையில் இருந்து கிடைப்பதாக முடிவடையும் இந்தப்படம்.

    ஒரே மாதிரியான உருவ அமைப்பு:

    ஒரே மாதிரியான உருவ அமைப்பு:

    இதற்கும், ஐக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? ஐ படத்தின் டிரைலரில் விக்ரமின் அந்த உருவமும், குவசிமோடோவின் உருவமும் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் அமைந்துள்ளது. இதனால் ஐ படமும் அந்த நாவலின், படத்தின் தழுவலாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    ஃபிளை திரைப்படம்:

    ஃபிளை திரைப்படம்:

    அடுத்ததாக, "ஃபிளை" திரைப்படம்...1986 ஆம் ஆண்டில் வெளிவந்த சயின்ஸ்பிக்‌ஷன் மற்றும் ஹாரர் திரைப்படம் இது. டேவிட் குரோன் பெர்க் இயக்கிய இப்படமானது ஜார்ஜ் லாங்கிலனின் "தி ஃபிளை" என்ற குறுங்கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

    புத்திசாலி விஞ்ஞானி:

    புத்திசாலி விஞ்ஞானி:

    செத் பிரண்டல் என்ற புத்திசாலி விஞ்ஞானி ஒருவர் வெரோனிகா என்ற பத்திரிக்கையாளர் ஒருவரை சந்திக்கின்றார். அவருடைய புதிய கண்டுபிடிப்பான "டெலிபாட்" பற்றிய கட்டுரைகளைத் தயாரிக்க வெரோனிகாவிடம் கோரிக்கை விடுக்கின்றார். இந்நிலையில் பபூன் குரங்கின் மேல் தன்னுடைய பரிசோதனையைச் செய்கின்றார் செத். அது வெற்றிகரமாக முடிந்தவுடன், அவருக்கும், வெரோனிகாவிற்கும் இடையில் காதல் மலர்கின்றது.

    காதலர்களிடையே சண்டை:

    காதலர்களிடையே சண்டை:

    இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு தோன்றுகிறது. வெரோனிகா இல்லாதததால் விரக்தி அடையும் செத், அந்த பரிசோதனையை தன் மேல் செய்து கொள்கின்றார். அப்போது, ஒரு ஈ ஒன்று அந்த ரசாயனக் கலவையில் தவறி விழுந்து விடுகின்றது.

    இராட்சத வடிவம் எடுக்கும் கதாநாயகன்:

    இராட்சத வடிவம் எடுக்கும் கதாநாயகன்:

    முதலில், அவருடைய ஆராய்ச்சி வெற்றி பெற்றாலும், கொஞ்ச நாட்களில் மெதுமெதுவாக பறக்கும் மிகப்பெரிய ஈயாகவே மாறிவிடுகின்றார் செத். அதிலிருந்து அவர் மீண்டாரா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

    ரெண்டும் ஒன்னுதான் போல:

    ரெண்டும் ஒன்னுதான் போல:

    இணையத்தில் வெளிவரும் ஐ படத்தின் கதையின் அடிப்படையில் பார்த்தால், இப்படத்தில் ஈயாக மாறும் கதாநாயகன் போல்தான், விக்ரமும் மனித மிருகமாக தோற்றமளிக்கின்றார் டிரெய்லரில்.

    பூனைக்குட்டி ஒருநாள் வெளியில் வரும்:

    பூனைக்குட்டி ஒருநாள் வெளியில் வரும்:

    மொத்தத்தில், கதை என்னவென்று தெரியாவிட்டாலும், இதுபோன்ற படங்களின் கலவையாகத்தான் "ஐ" படமும் உருவாகியிருக்கும் என்ற பேச்சு நிலவுகிறது.

    அதே நேரம் ரசிகர்கள் எத்தனை விவரமானவர்கள் என்பது புரிந்து படங்களை உருவாக்குபவர் ஷங்கர். ஐ கதை இதுதான் என பலரும் எழுதி வந்தாலும் கூலாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர். ஆக ஐ தழுவல் கதையாக இருக்க வாய்ப்பில்லை. இந்தப் படங்களின் இன்ஸ்பிரேஷனில் சில காட்சிகள் உருவாகியிருக்கக் கூடும். படம் வந்தால் தெரிந்துவிடப் போகிறது!

    English summary
    Director shankar’s “AI” film may be a collaboration of the Hollywood films The hunchback of notre dame and Fly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X